Published:Updated:

``செலவு 60 லட்சம்... ஒன்றரை வருட முயற்சி... மூன்று நிமிட த்ரில் போட்டி!" - ஜெர்மனியில் அசத்திய சென்னை சிறுவன்

சென்னையைச் சேர்ந்த சிறுவன் மஹமூத் அக்ரமுக்கு வயது 13 மட்டுமே. ஆனால், இவருக்குத் தெரிந்த மொழிகளின் எண்ணிக்கை 400. அதில் 46 மொழிகளில் சரளமாக எழுத, படிக்க, பேசத் தெரியும் அக்ரமுக்கு. நமக்கு வியப்பாக இருக்கலாம். ஆனால், புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வதில் அக்ரமுக்கு அளவில்லா ஆர்வம். தன் மொழித் திறனை ஜெர்மனி நாட்டின் ரியாலிட்டி நிகழ்ச்சி ஒன்றில் சமீபத்தில் நிரூபித்திருக்கிறார், ஆரவாரமின்றி பெரிய சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். அதனால் இவருக்கு ஆச்சர்யமான பரிசும் கிடைத்திருக்கிறது.

நடந்து முடிந்த இந்நிகழ்ச்சியில் நடந்த சுவாரஸ்யங்களை விவரிக்கிறார், அக்ரமின் தந்தை மொழிப்பிரியன்.

``செலவு 60 லட்சம்... ஒன்றரை வருட முயற்சி... மூன்று நிமிட த்ரில் போட்டி!" - ஜெர்மனியில் அசத்திய சென்னை சிறுவன்

``ஜெர்மனி நாட்டின் i&u டிவிக்கு அக்ரமின் மொழித் திறமை பற்றித் தெரிஞ்சிருக்கு. அந்த சேனல் நடத்திவரும் `Small Vs Big - the unbelievable duel' நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. அதில்,  5 - 13 வயதுள்ள குழந்தைகள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புக் கொடுப்பார்கள். மிகவும் திறமையான குழந்தைகள் பங்குபெறும் நிகழ்ச்சி அது. அதில் அக்ரம் கலந்துக்கணும்னு அவங்க ஆசைப்பட்டாங்க. அதனால, அக்ரமின் திறமையை நேரில் தெரிஞ்சுக்க முடிவுபண்ணி, அந்நிகழ்ச்சித் தரப்பிலிருந்து ஆறு பேர் கொண்ட குழு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னை வந்தாங்க. 

அக்குழுவினர் ஒருவாரம் சென்னையில் தங்கியிருந்தாங்க. அந்த நாள்களில், காலை 9 மணி முதல் மாலை 6.30 மணிவரை அக்ரமின் திறமையைப் பல வகையிலும் உறுதிப்படுத்தினாங்க. பல மொழிகளைப் பேசுவதுடன், அக்ரமுக்கு அம்மொழிகளைக் கணினியில் சரியா டைப் பண்ணவும் தெரியும். இந்தச் சாதனையை இதுவரை எந்தக் குழந்தையும் செய்யலை. அதனால இதையே அந்நிகழ்ச்சியில செய்துகாட்டச் சொல்லி, சேனல் தரப்பினர் முடிவு பண்ணினாங்க" என்கிறார், மொழிப்பிரியன். 

``செலவு 60 லட்சம்... ஒன்றரை வருட முயற்சி... மூன்று நிமிட த்ரில் போட்டி!" - ஜெர்மனியில் அசத்திய சென்னை சிறுவன்

அந்நிகழ்ச்சியில் அக்ரம் கலந்துகொள்வது உறுதியானது. அதற்காக, கடந்த அக்டோபர் மாதம் அக்ரம் மற்றும் அவர் குடும்பத்தினர் ஜெர்மனி சென்றுள்ளனர். விறுவிறுப்பு மற்றும் சுவாரஸ்யத்துக்குப் பஞ்சமில்லாத வகையில் அந்நிகழ்ச்சி நடந்திருக்கிறது. அங்கு நடந்த நிகழ்வினை அப்படியே விவரிக்கிறார், மொழிப்பிரியன்.

``அக்ரமின் திறமையைக் கண்டுபிடிக்கவும், அவனுடன் போட்டிப்போடவும் 100 மொழிகள் தெரிந்த மொழி ஆளுமைமிக்க 36 பேரை அந்நிகழ்ச்சிக்கு வரவழைச்சிருந்தாங்க. அவங்க எல்லோரும் உலகின் பல நாடுகளைச் சேர்ந்தவங்க. அந்நிகழ்ச்சியில ஜெர்மன் மொழியில் பல்வேறு வார்த்தைகளைச் சொன்னாங்க. அதை அவங்க சொல்ற மற்ற மொழிகளில் மொழி பெயர்ப்பதுடன் கணினியில டைப் செய்யணும். போட்டி நேரம் மூணு நிமிஷம்தான். அதற்குள் அக்ரம் மொழி பெயர்த்த 21 மொழிகளில், 18 வார்த்தைகள் சரியாக இருந்துச்சு. 

``செலவு 60 லட்சம்... ஒன்றரை வருட முயற்சி... மூன்று நிமிட த்ரில் போட்டி!" - ஜெர்மனியில் அசத்திய சென்னை சிறுவன்

இதேபோலவே, அக்ரமின் சோதனையை முறியடிக்க வந்திருந்த 36 பேருக்கும் செய்தாங்க. ஆனா, 36 பேருக்கும் தனித்தனியா போட்டி நடக்கலை. அவங்க எல்லோருக்கும் கணினி கொடுக்கப்பட்டிருந்துச்சு. மொழி பெயர்க்கச் சொல்லப்படும் மொழியைத் தெரிஞ்சவங்க விளக்கை எறிய வெச்சுட்டு, அவங்க மட்டும் மொழி பெயர்ப்பாங்க. இப்படி மூணு நிமிஷத்தில் 36 பேரும் சேர்ந்து 20 மொழிகளில் மொழி பெயர்த்து, அதில் 18 வார்த்தைகள் சரியாக இருந்துச்சு. முடிவில் அக்ரம் வெற்றி பெற்று, அவனுடைய மொழித் திறமை நிரூபிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் ஒளிபரப்பாச்சு. குறிப்பா, இந்நிகழ்ச்சியில அக்ரம் கலந்துக்க ஒன்றரை ஆண்டுகள் செலவிட்ட அந்த சேனல், இதற்காக 60 லட்சத்துக்கும் மேல் செலவு செய்தாங்க. 

``செலவு 60 லட்சம்... ஒன்றரை வருட முயற்சி... மூன்று நிமிட த்ரில் போட்டி!" - ஜெர்மனியில் அசத்திய சென்னை சிறுவன்

அக்ரமுக்கு 25 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்க அந்த நிகழ்ச்சியினர் முடிவெடுத்தாங்க. பரிசு மற்றும் பரிசுத் தொகை எதையும் நாங்க எதிர்பார்க்கலை. அதை நிகழ்ச்சி தரப்பிடம் சொல்லிட்டோம். அதனால அக்ரமின் எதிர்கால படிப்புச் செலவு முழுவதையும், அந்நிகழ்ச்சியினர் ஏத்துக்கிறதா சொல்லிட்டாங்க. அதற்கான சான்றிதழையும் கொடுத்திருக்காங்க. அதனால இந்தியாவைத் தவிர, உலகின் எந்த நாட்டிலும் அக்ரம் படிக்கலாம். `நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங்'கில், அக்ரம் எட்டாவது முடிச்சிருக்கான். ஆஸ்திரிய நாட்டிலுள்ள உலகின் முன்னணி பள்ளி ஒன்றில் படிப்பதற்கு அக்ரமுக்கு வாய்ப்பு கிடைச்சிருக்கு. இன்னும் சில மாதங்களில் அங்க போய் ஒன்பதாம் வகுப்பைத் தொடர்வான். அதற்கான செலவுகளை அந்நிகழ்ச்சி தரப்பினர் மற்றும் அந்த ஸ்கூல் நிர்வாகம் ஏற்றுக்கொள்வாங்க" என்கிறார் பெருமிதத்துடன்.

``செலவு 60 லட்சம்... ஒன்றரை வருட முயற்சி... மூன்று நிமிட த்ரில் போட்டி!" - ஜெர்மனியில் அசத்திய சென்னை சிறுவன்

தன் மொழித் திறமைக் குறித்துப் பேசும் அக்ரம், ``ஜெர்மனி நிகழ்ச்சியை மறக்க முடியாத மெமரீஸ். அந்நிகழ்ச்சியில நான் தமிழிலும் பேசினேன். நிகழ்ச்சியில என்னை ரிக்ஷாவுல உட்காரவெச்சு மேடையில வலம்வந்தாங்க. இதுபோல இன்னும் நிறைய சாதிப்பேன். இஸ்ரேல் நாட்டிலுள்ள ஆன்லைன் ஸ்கூல் ஒன்றில், கரஸ்ல 12 மொழிகளைக் கத்துக்கிட்டிருக்கேன். நிறைய மொழிகளைக் கத்துக்க தொடர்ந்து ஆசைப்படறேன். அதனால, எனக்கு எந்தப் பிரச்னையும் வரலை. எந்நேரமும் மொழிகளைக் கத்துகிட்டே இருக்க மாட்டேன். அதற்காகத் தினமும் கொஞ்ச நேரம் ஒதுக்குவேன். அப்புறம் விளையாடுவேன்; எனக்குப் பிடிச்ச விஷயங்களைச் செய்வேன். எனக்கு ஐ.எப்.எஸ் அதிகாரியாகணும்னு ஆசை. எதிர்காலத்துல அதற்கான முயற்சிகளில் மேற்கொள்வேன். தவிர, இப்போ ஸ்கைப்ல மொழி வகுப்புகளையும் எடுக்கிறேன்" என்று புன்னகையுடன் சொல்கிறார்.

Vikatan