Published:Updated:

``40 வயதில் நாய்க்குணம் என்பதற்கு என்ன காரணம்?" - பாரதி பாஸ்கர் #LifeStartsAt40 #நலம்நாற்பது

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
``40 வயதில் நாய்க்குணம் என்பதற்கு என்ன காரணம்?" - பாரதி பாஸ்கர் #LifeStartsAt40 #நலம்நாற்பது
``40 வயதில் நாய்க்குணம் என்பதற்கு என்ன காரணம்?" - பாரதி பாஸ்கர் #LifeStartsAt40 #நலம்நாற்பது

"என் பிள்ளைக்கு 10 வயதாகும்வரை செல்போன் கொடுக்க மாட்டேன்" என்கிறார் ஃபேஸ்புக் அதிபர் மார்க் சக்கர்பெர்க்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

விரக்தியின் விளிம்பில் இருப்பவர்களைக்கூட தன்னம்பிக்கைப் பேச்சின்மூலம் உயிர்ப்புடன் செயல்பட வைக்க முடியும். அத்தகைய தன்னம்பிக்கை பேச்சுகளைப் பட்டிமன்றங்கள், மேடைகளில் முழங்கிவருபவர் பாரதி பாஸ்கர். அவரிடம் 40 வயதைத் தாண்டியவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் ஆலோசனைகள், குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்ய வேண்டியவை என்னென்ன என்று கேள்விகளாக முன்வைத்தோம். விரிவாகப் பேசினார்.

``40 வயதில் நாய்க்குணம் என்பதற்கு என்ன காரணம்?" - பாரதி பாஸ்கர் #LifeStartsAt40 #நலம்நாற்பது

``40 வயதானாலே பலருக்கும் எதிர்காலம் குறித்த அச்ச உணர்வு ஏற்படுகிறது. அவர்களுக்கு நீங்கள் கூற விரும்பும் ஆலோசனை என்ன?''

 ``40 வயதில் நாய்க்குணம். இதை நாம்தான் தெரிந்து நடக்கணும்' என்ற பாடலொன்று உண்டு. 20 - 25 வயதைப்போல 40 வயதில்  நம் எண்ணம்போல உடல் ஒத்துழைக்காது. நம்முடன் பணியாற்றும் இளைஞர்கள் சிலர் நம்மைவிட உயர்ந்த பொறுப்புகளுக்கு கடந்து செல்வார்கள். நம் பேச்சைக் கேட்டு வளர்ந்த பிள்ளைகள், `நீ சொல்றது தப்பு' என நமக்கே புத்திமதி சொல்வார்கள். இதனால், அந்த வயதில் நமக்குக் கோபம், கண்டிப்பு அதிகம் உண்டாகும். இதுதான் `நாய்க்குண'த்துக்குக் காரணம். வயது வித்தியாசமின்றி எல்லோரிடமும், எப்போதும் ஏதாவது ஒரு நல்ல விஷயத்தைக் கற்றுக்கொண்டிருந்தால், வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். `பசித்திரு! தனித்திரு! விழித்திரு!' என்று வள்ளலார் கூறியதுபோல், நல்ல விஷயங்களைத் தெரிந்துகொள்வது அல்லது அறிவைத் தேடுவதற்கான பசியுடன் எப்போதும் இருக்க வேண்டும். அதனால் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக, ஆனந்தமாக இருக்கும். எனவே, 40 வயது என்பது பயப்பட வேண்டிய வயதல்ல! பக்குவப்பட வேண்டிய வயது.''

``40 வயதில் நாய்க்குணம் என்பதற்கு என்ன காரணம்?" - பாரதி பாஸ்கர் #LifeStartsAt40 #நலம்நாற்பது

``இன்றையகால குழந்தை வளர்ப்பு முறையில் பெற்றோர் செய்ய வேண்டியவை என்ன?''

``உலகத்தில் மிகச் சுலபமான வேலை `குழந்தை வளர்ப்பு' பற்றி ஆலோசனை சொல்வதுதான். அந்த ஆலோசனையின்படி குழந்தையை வளர்ப்பது என்பது கடினமான வேலை. இங்கே, செல்போன்களின் பயன்பாடு பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். செல்போன் சேவையை வழங்கிக்கொண்டிருக்கும் உலகின் பெரு நிறுவனங்களின் முதலாளிகள், `கிரியேட்டிவிட்டி திறன் குறைவதால் செல்போன் சாதனங்களுடன் குறைந்த அளவே நேரத்தைச் செலவிடுகிறோம்' எகிறார்கள். 

`செல்போன் பயன்பாட்டால் அதிக நேரம் விரயமாகிறது. அதனால் `போன் ஹாலிடே ஹவர்ஸ்' எனச் செல்போனை குறிப்பிட்ட நேரம் அணைத்து வைத்துவிடுவேன்' என்கிறார் மாஸ்டர் கார்டு நிறுவன சி.இ.ஓ அஜய்பால் சிங் பாங்கா. `என் பிள்ளைக்கு 10 வயதாகும்வரை செல்போன் கொடுக்க மாட்டேன்' என்கிறார் ஃபேஸ்புக் அதிபர் மார்க் சக்கர்பெர்க். இப்படி, முக்கியமான நபர்களே தங்களது அனுபவத்தின் மூலம் செல்போன் பயன்பாட்டால் உண்டாகும் சிக்கல்கள் குறித்துக் கூறியிருக்கிறார்கள். ஆனால், குழந்தைகள் அடம்பிடிக்காமலிருக்க அவர்களது கைகளில் செல்போன் கொடுப்பது சிறந்த தீர்வாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் சில பெற்றோர். இதனால் சுற்றியிருக்கும் வெளியுலகத்துடன் குழந்தைகளுக்குத் தொடர்பு இல்லாமல் போகிறது. இந்தப் போக்கு மிகவும் தவறானது. குறைந்தபட்சம் 10 வயது வரையாவது குழந்தைகளுக்கு செல்போன் தரக்கூடாது. அதற்குப் பதிலாக, சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கு முதலில் பெற்றோரும் வாசிப்புப் பழக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுதவிர, பெற்றோர் அவரவர் வாழ்க்கை முறைக்கு ஏற்றாற்போல, ஆரோக்கியமான முறையிலும், தேவைக்கேற்ப கண்டிப்புடனும் குழந்தைகளை வளர்க்க வேண்டும்.'' 

``40 வயதில் நாய்க்குணம் என்பதற்கு என்ன காரணம்?" - பாரதி பாஸ்கர் #LifeStartsAt40 #நலம்நாற்பது

``பயமில்லாமல் வாழ என்ன செய்வது?''  

``உலகில் பயமில்லாதவர் யாரும் இருக்க முடியாது. மிகவும் தைரியம் அல்லது வீரம் என்பதே பயத்தை மறைத்துச் செயல்படுவதுதான். மேடையில் பல ஆயிரம் பேர் முன்னிலையில் நான் தைரியமாகப் பேசுவேன். ஆனால், வாகனம் ஓட்டுவதற்கு மிகவும் பயப்படுவேன். இப்படி அவரவருக்கென்று நிச்சயம் பயம் இருக்கும். இரவில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கும் கயிற்றைப் பார்த்து பயந்து, பிறகு விடிந்ததும் உண்மை தெரியவந்ததும் பயம் விலகும். அதுபோல நம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எளிதில் தீர்வுகாணும் விஷயங்களுக்குக்கூட பயப்படுகிறோம். பயத்துக்கான காரணத்தைக் கண்டறிந்து தீர்வு பற்றி யோசித்தால், பயமின்றி வாழலாம்.''  
 

``மாற்றம் ஏற்பட்டது எப்படி?''

``ஆரம்பக்காலத்தில் சோகக் கடலில் மூழ்கியதைப்போலப் பட்டிமன்றங்களிலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பேசுவேன். பிறர் நகைச்சுவையாகப் பேசினால்கூட அதை நான் ரசிக்க மாட்டேன். ‘ஆழமான விஷயங்களை இப்படி ஜாலியாவா சொல்றது?’ என நினைப்பேன். சாலமன் பாப்பையா சார் அணியில் சேர்ந்த பிறகுதான், இறுக்கமாகப் பேசுவதில் உள்ள குறையை உணர்ந்தேன். `முகத்தைக் கோபமா வெச்சுக்கிட்டு சுட்டால்தான் செத்துப்போவானா... சிரிச்சுக்கிட்டு சுட்டால்கூட செத்துப்போவான்' என ஒரு படத்தில் சத்யராஜ் சொல்லியிருப்பார். அதை நினைத்துக்கொள்வேன். நகைச்சுவையின் வாயிலாகவும் அவசியமான, ஆழமான கருத்துகளை மக்களிடம் கொண்டுசேர்க்க முடியும். அதுதான் அதற்குச் சரியான வழி என்பதை உணர்ந்தேன். அதற்கு என்னைத் தயார்படுத்திக்கொண்டேன். அன்று முதல் பட்டிமன்றங்கள் மட்டுமல்ல, தனிப்பட்ட வாழ்க்கையிலும் நகைச்சுவையைப் பிரதானமாக்கிக்கொண்டேன். அதனால், என் பணிகளும் வாழ்க்கையும் சுவாரஸ்யமானது'' என்கிறார் பாரதி பாஸ்கர்.

Vikatan
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு