Published:Updated:

ஒரு மீன் ரூ.20,000; ஆந்திராவின் `புலாசா மீன்': மக்கள் போட்டி போட்டு வாங்க காரணம் என்ன?

புலாசா மீன்

கோதாவரி ஆற்றிலிருந்து பிரியும் ஆறு ஒன்றில் இளைஞர் ஒருவர் வலை வீசி மீன் பிடிக்கையில், அவரது வலையில் எதிர்பாராத விதமாக சுமார் 2 கிலோ எடையுள்ள புலாசா மீன் கிடைத்துள்ளது.

ஒரு மீன் ரூ.20,000; ஆந்திராவின் `புலாசா மீன்': மக்கள் போட்டி போட்டு வாங்க காரணம் என்ன?

கோதாவரி ஆற்றிலிருந்து பிரியும் ஆறு ஒன்றில் இளைஞர் ஒருவர் வலை வீசி மீன் பிடிக்கையில், அவரது வலையில் எதிர்பாராத விதமாக சுமார் 2 கிலோ எடையுள்ள புலாசா மீன் கிடைத்துள்ளது.

Published:Updated:
புலாசா மீன்

ஆந்திர மாநிலம், கோதாவரி ஆற்றின் கழிமுகப் பகுதியில் கிடைக்கக்கூடிய அரிய வகை மீன்தான் `புலாசா மீன்’. ஜூலை முதல் செப்டம்பர் வரையான காலத்தில் மட்டுமே இந்த மீன் அப்பகுதியில் கிடைக்கும் என்பதால், இந்த மீனைப் போட்டி போட்டுக்கொண்டு அதிக விலையிலும் மக்கள் வாங்குவதுண்டு. காரணம் இந்த மீனை சமைத்து சாப்பிடுவதைக் கௌரவமாக நினைக்கிறார்கள் ஆந்திர மக்கள். இதை வாங்கி மற்றவர்களுக்கு பரிசு அளிக்கும் வழக்கமும் இங்குண்டு. அந்தளவுக்கு ஆந்திர மக்களின் வாழ்வோடு இரண்டற கலந்தது.

புலாசா மீன்
புலாசா மீன்

உடல் ஆரோக்கியத்துக்கு மிகச் சிறந்ததாகக் கருதப்படும் புலாசா, இதய நோய், புற்று நோய் உள்ளிட்ட பலவித நோய்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே, `தாலியை விற்றாவது புலாசா மீனை வாங்கித் தின்றுவிடு' (`புஸ்டேலு ஆமினா புலாசா தின்னிலி’) என்ற ஆந்திர பழமொழி ஒன்று உண்டு.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்நிலையில் கோதாவரி ஆற்றிலிருந்து பிரியும் ஆறு ஒன்றில் இளைஞர் ஒருவர் வலை வீசி மீன் பிடிக்கையில், அவரது வலையில் எதிர்பாராத விதமாக சுமார் 2 கிலோ எடையுள்ள புலாசா மீன் கிடைத்துள்ளது. அந்த இளைஞரிடமிருந்து பார்வதி என்ற மீன் வியாபாரி ஒருவர் 19,000 செலுத்தி அந்த மீனை வாங்கியுள்ளார்.

புலாசா மீன் | பார்வதி
புலாசா மீன் | பார்வதி

அந்த மீனை மார்க்கெட்டில் வியாபாரத்துக்கு வைத்தபோது, ஏராளமானவர்கள் புலாசா மீனைப் போட்டி போட்டுக்கொண்டு விலை பேசினர். 25,000 ரூபாய் என மீனுக்கு விலை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இறுதியாக 20,000 ரூபாய்க்கு அந்த மீன் விற்கப்பட்டது.