Published:Updated:

தடம் மாறும் நாத்தனார் !

என் டைரி - 294

தடம் மாறும் நாத்தனார் !

என் டைரி - 294

Published:Updated:

ஒவ்வொன்றுக்கும் பரிசு:  100

 ##~##

பிரச்னை என்றால், பெரும்பாலும் இந்தச் சமூகம் ஒரு ஆணையே குற்றவாளியாக்கிப் பார்க்கும். ஆனால், சொகுசான வாழ்க்கைக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கும் பெண்களும் இங்கு உண்டு என்பதை கசப்புடன் ஜீரணிக்கத்தான் வேண்டி இருக்கிறது.அந்த வரிசையில் என் கணவரின் தங்கையும் ஒருத்தி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தடம் மாறும் நாத்தனார் !

என் நாத்தனாருக்கு, பிறந்த வீட்டில் செல்லம் அதிகம். அதனால், தான் ஒருவனை விரும்புவதாக அவள் கூறியபோதுகூட, அவளின் சந்தோஷத்துக்காக அதை  ஏற்றுக்கொண்டார்கள். சில வருடங்கள் சந்தோஷமாக  சென்றுகொண்டிருந்த அவளுடைய வாழ்க்கைக்கு, முற்றுப்புள்ளி வைத்தது, அவளுடைய கணவரின் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம்!

வறுமை அவர்களைக் கெட்டியாகப் பிடித்துக்கொள்ள... எங்கள் சக்தியையும் மீறி கடன் வாங்கி உதவியதில், ஓரளவுக்கு மீண்டார்கள். அவள் கணவர் 15 ஆயிரம் சம்பளத்தில் ஒரு வேலையில் சேர, நிலைமை கொஞ்சம் சீரானது. ஆனால், அந்தச் சம்பாத்தியம் நாத்தனாரின் ஆடம்பரக் கனவுகளுக்கு துளியும் கை கொடுக்கவில்லை.

இந்நிலையில்தான், அவளுடைய உண்மையான முகம் எனக்குத் தெரியவந்தது. அழகி அவள். தன் வசீகரப் பேச்சினால் யாரையும் தன் வசமாக்கக் கூடிய வள். அதையே தன் ஆயுதமாக எடுக்க ஆரம்பித்தாள். தோழிகள் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று, அந்த வீட்டுப் பெண்களிடம் தோழமையுட னும், அக்கறையுடனும் இருப்பதுபோல காட்டிக் கொள்வாள். ஆனால், மெள்ள அவளுடைய பார்வை, அந்தப் பெண்களின் கணவர்கள் மீது பாய ஆரம்பிக் கும். விரைவில் அவர்களுக்கும் நெருக்கமாகிவிடுவாள்.

'பழகுவதில் என்ன தவறு இருக்கப்போகிறது?' என்று உங்களுக்குத் தோன்றலாம். நன்றாகப் 'பழகிய’ பின்பு அந்த ஆண்களிடம் இருந்து பணம், நகை போன்றவற்றை வாங்கிக் கொள்வதில் கில்லாடி.

'மாதத்துக்கு ஒரு புது நகை, விலை உயர்ந்த புடவைகள், ஹேண்ட்பேக், காலணிகள் என எப்படி அவள் கணவரின் சொற்ப சம்பாத்தியத்தால் வாங்க முடிகிறது?' என்று மூன்றாம் நபர் யோசிக்கும் அளவுக்குக் கூட அவள் கணவர் யோசிக்க மாட்டார்... அவ்வளவு வெகுளி!

அவள் கண் வைத்த குடும்பங்களில், என் தோழியின் குடும்பமும் சிக்கியபோதுதான்... நாத்தனாரின் இத்தகைய நடவடிக்கைகள் அனைத்தும் எனக்குத் தெரிய வந்தன. என் கணவரிடமோ, மாமியார், மாமனாரிடமோ இதையெல்லாம் கூறினால், நிச்சயமாக என்னை நம்பமாட்டார்கள். கூடவே, என்னை வெறுக்கவும் செய்வார்கள். அந்தளவுக்கு அவள் மேல் கண்மூடித்தனமான பாசம் கொண்டவர்கள்.

நானே நேரடியாக அவளைக் கண்டிக்கலாம் என்றால், குடும் பத்தில் பிரச்னை வெடிக்கும். கண்டிக்காமல் விட்டால், பல குடும்பங்களில்            பிரச்னை பிறக்கும் என்பதோடு... எங்கள் குடும்பத்துக்கும் அவ மானம் வந்து சேரும்!

எப்படித் திருத்த அவளை..?!

- பெயர் வெளியிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 293ன் சுருக்கம்

தடம் மாறும் நாத்தனார் !

''வீட்டின் முதல் வாரிசு நான். அதனாலேயே அப்பா, அம்மா, அய்யா, அப்பத்தா, சித்தப்பா, சித்தி, குழந்தைகள் என்றிருந்த கூட்டுக் குடும்பத்தில் எனக்கு எல்லோரிடமும் கூடுதல் செல்லம். இப்படி வளர்ந்த நான்... உறவுகள், அக்கம்பக்கம் என யாரிடமும் பேசிப் பழகாத இறுக்கமான சூழலில் உள்ள குடும்பத்தில் வாக்கப்பட்டது கொடுமையே! 'கந்தசஷ்டி கவசம் படி, டி.வி பாரு' என்றே முடக்கிப் போடுகிறார்கள். அம்மா வீட்டுக்கு சென்றுவரும் நாட்களில்தான் கொஞ்சம் சந்தோஷமாக இருக்கிறேன். 'குழந்தை பிறந்தா சரியாயிடும்' என்கிறார் கணவர். ஆனால், 'உறவுகளிடம், பிறமனிதர்களிடம் பேசிப்பழகிய, கூடி ஆடிய சந்தோஷம்... பிறக்கப் போகும் குழந்தைக்கும் இனி கிடைக்காதா?' என்று பயந்து நடுங்குகிறேன். இறுக்கமான இல்லத்தின் சுவரை இடிக்க வழி உண்டா..?'

வாசகிகள் ரியாக்ஷன் தராசில் நிறுத்திக்காட்டு!

தனியாகவே வாழ்ந்து பழகியவர்களுக்கு கூட்டுக் குடித்தனத்தின் அருமை பெருமைகள் புரிய வாய்ப்பில்லை. அதேநேரத்தில் உன் புகுந்த வீட்டினரை ஒரேயடியாக வெறுத்து ஒதுக்கவும் கூடாது. காரணம்... அவர்கள் வளர்ந்த சூழல் அப்படி. உங்கள் உணர்வுகளுக்கு மரியாதை கொடுக்காமலிருப்பது அவர்கள் செய்யும் தவறுதான். அதை, கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைக்க முயற்சிக்க வேண்டும். பிறந்த வீடு, புகுந்த வீடு இரண்டையும் தராசில் சரிசமமாக நிறுத்திக் காட்டுபவளே திறமையான பெண். மாமியாரிடம் மகள் போலவும், கணவரிடம் நல்ல தோழியாகவும் நடந்து கூட்டுக் குடும்பத்தின் மகத்துவத்தை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச்சொல்லி வெற்றி காணுங்கள் தோழியே..!

- பத்மப்பிரியா, வில்லிவாக்கம்

நம்பிக்கை வை!

கொடுமைக்கார மாமியாரோ, கணவரோ வாய்க்கவில்லை உனக்கு. கூட்டுக் குடும்ப அனுபவம் இல்லாதவர்கள் என்பது மட்டும்தானே நீ குறையாகப் பார்ப்பது! இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொருவிதத்தில் வளர்ந்து வந்திருக்கும். காலப்போக்கில்தான் எதையுமே மாற்ற முடியும். ஒரு குழந்தை பிறந்து வளரும்போது, இதுநாள் வரை நீ இழந்த சுகங்களை திரும்ப பெறமுடியும் உன்னால்! தேவையும், அவசியமும் சூழ்நிலைகளை மாற்றி... உன் கணவர், மாமியாரின் கட்டளைகளை தளர்த்தும் என்று நம்பிக்கை வை. அசட்டுத்தனமாக அதிரடி முடிவு எடுத்து, தெளிவாக செல்லும் வாழ்க்கையைக் குழப்பிவிடாதே!

- என்.கோமதி, திருநெல்வேலி

ஜெராக்ஸ் வாழ்க்கையை எதிர்பார்க்காதே!

அன்புத்தோழியே! உன் வாழ்க்கை 'நீயா - நானா?’ போல் உள்ளது. ஆயினும் சோர்ந்துவிடாதே, மாற்றங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை! முன்போன்றே ஜெராக்ஸ் வாழ்க்கை இப்போது எதிர்பார்த்தால் கிடைக்காது. கிடைத்தாலும் நாளடைவில் போரடித்துவிடும் என்பதை மனதில்கொண்டு, குடும்பத்தில் நிறைந்திருக்கும் இறுக்கம் தளர முயற்சி செய். உன் உறவுக்காரர்களுக்காக ஏங்காமல்... பூ விக்க வருபவர், காய்கறி கொண்டு வரும் பாட்டி என்று பலரிடமும் பேசு... உன் மாமனார் - மாமியார் பற்றி பெருமையாகப்பேசு. நாளாவட்டத்தில், அந்தக் குடும்பத்தின் போக்கிலேயே மாற்றம் வரும்... நம்பு!

- எஸ்.ஜம்பகலட்சுமி, கிழக்கு தாம்பரம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism