Published:Updated:

மெள்ளக் கொல்லும் மொபைல் போதை !

மெள்ளக் கொல்லும் மொபைல் போதை !

மெள்ளக் கொல்லும் மொபைல் போதை !

மெள்ளக் கொல்லும் மொபைல் போதை !

Published:Updated:

என் டைரி - 240

மெள்ளக் கொல்லும் மொபைல் போதை !

நானும் என் கணவரும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள். வெளிநாட்டில் செட்டிலாகி இருபது வருடங்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆகின்றன. இரண்டு குழந்தைகள் உள்ளனர். எங்களின் அந்நியோன்ய வாழ்க்கையைப் பார்த்து வியந்து பாராட்டுவார்கள் அந்நாட்டு நணபர்கள். ஆனால், சமீபமாக கணவரின் போக்கில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் தடுமாறுகிறது எங்களின் இல்லறம்.

பெற்றோரைப் பார்ப்பதற்காக சமீபத்தில் இந்தியா சென்று திரும்பியதில் இருந்து பகல், இரவு என்று சதா சர்வகாலமும் போனில் பேசியபடியே இருக்கிறார். ''யார்கிட்டதான் அப்படி பேசறீங்க..?'' என்றால், ''இந்தியா போனப்போ என் ஸ்கூல், காலேஜ் ஃப்ரெண்ட்ஸை எல்லாம் சந்திச்சேன். அவங்ககிட்ட எல்லாம் கான்டக்ட் நம்பர் வாங்கிட்டு வந்தேன். அதான்...'' என்று சொன்னார். அவர் அறியா தருணங்களில் மொபைலை எடுத்துப் பார்த்தால், டயல்டு கால்ஸ், ரிசீவ்டு கால்ஸ், மிஸ்டு கால்ஸ் என்று நிரம்பி வழிகின்றன குறிப்பிட்ட சில ஐந்தாறு பெண்களின் பெயர்கள். அனைத்தும் இந்தியா நம்பர்கள்.

நட்பை புதுப்பிக்க இப்படி நாள் முழுவதும் பேசுவதாக இருந்தாலும்... பள்ளி, கல்லூரித் தோழிகள் என்றால் அவர்களும் அம்பது வயதை நெருங்கும் தருணத்தில்தான் இருப்பார்கள். அந்த வயதிலுள்ள பெண்களுக்கு குடும்பம், குழந்தை என்ற சூழல்களுக்கு மத்தியில் இப்படி இவருடன் இடைவிடாமல் பேச எப்படி கிடைக்கும் நேரம்? நேரமே இருந்தாலும், அப்படி என்ன விஷயம் இருக்கப் போகிறது இவர்களுக்கிடையில் இப்படி பகல், இரவென போனில் கரைய? அல்லது, 'தோழிகள்’ என்று கூறிவிட்டு, வேறு பெண்களுடன் பேசுகிறாரா..? அப்படியானால், யார் அவர்கள்..?

- இப்படித்தான் கேள்விச் சூறாவளிகளால் சிக்கிக் கிடக்கிறது என் மனம். அவரிடம் வெளிப்படையாக கேட்கவும் தைரியமில்லாமல் மனதாலும், உடலாலும் உருக்குலைந்து கிடக்கிறேன். என்னைக் கவனித்து, 'என்னாச்சு..?’ என்று கேட்கும் மதியைக்கூட மழுங்கடித்துவிட்டது அவரின் மொபைல் போதை.

ஒருவேளை, அவர் கூறுவதுபோல தோழிகளுடன் தொடர விரும்பும் நட்பை, நான்தான் தேவையில்லாமல் பெரிதுபடுத்துகிறேனா? 'சரி, கண்டும் காணாமல் இருந்து விடலாம்’ என்றால், அவர் என்னை விட்டு விலகிக்கொண்டே இருப்பதை பதறி உணர்த்தும் என் உள் மனதை என்ன சொல்லி ஆறுதல்படுத்துவது?

சொல்லுங்கள் தோழிகளே...

                         - ஊர், பெயர் வெளிட விரும்பாத வாசகி

சிநேகிதிக்கு... சிநேகிதிக்கு...

என் டைரி 239ன் சுருக்கம்...

நான் வீட்டின் மூத்த மகள். வறுமையால் குடும்பப் பொறுப்புகள் என் தலையில் விழ... தனியார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தேன். புதிதாக சேர்ந்த கம்ப்யூட்டர் ஆபரேட்டரின், கலகலப்பும், பண்பும் என்னை வெகுவாக ஈர்க்க, நட்பு காதலானது. குடும்ப விஷயங்களைப் பகிர்ந்து கொண்ட நான், காதலை மட்டும் சொல்ல முடியாமல் தவிக்கையில், என் சக தோழியும், அவரும் நெருக்கமாக பழகுவது தெரிந்து தோழியிடமிருந்து விலகிக் கொண்டேன். ஆனாலும், அவரை யாருக்கும் விட்டுக் கொடுக்க மனமில்லை. என் குடும்பத்தை பார்ப்பதா... வாழ்க்கையைப் பார்ப்பதா... தெளிவில்லாமல் தவிக்கிறேன். வழி சொல்லுங்கள்...''

''அன்பு, பாசம் இவையெல்லாம் இயல்பாக ஏற்பட வேண்டும். ஆணையிட்டு பெற முடியாது. உன்னை விரும்பாத ஒருவனை, நீ இப்படி வெறித்தனமாக விரும்புவது நல்ல முடிவை எப்போதும் தராது. உன் மனோபாவம் மற்றொருத்தியின் கணவனை அபகரிக்கத் துடிப்பதற்குச் சமம். எனவே, முதலில் அதை விட்டுவிடு. இந்த வயதில் கல்யாண ஆசையா... என்றெல்லாம் வருந்தத் தேவையில்லை. இதுதான் வயது. எனவே, நல்லதொரு துணையைத் தேடிக் கொண்டு, வாழ்க்கையில் நிம்மதியைப் பெறுவது உன் கையில்தான் இருக்கிறது.

- எஸ்.கௌரிலஷ்மி, ஸ்ரீரங்கம்

குடும்பத்தின் மூத்த பெண்ணான உனக்கு நிறைய கடமைகள் காத்திருக்கின்றன. உன் அலுவலக ஆணுடன் நீ கொண்டிருப்பது ஒரு தலைக்காதல். அவர் எப்போதாவது உன்னை விரும்புவதாக சொல்லியிருக்கிறாரா... இல்லையே! காதலில் விழுவது சகஜம். அது, ஒருதலை ராகமாகப் போகும்போது, அவரை உள்ளத்திலிருந்து தூக்கி எறிந்து விடுவதுதான் உத்தமம். உன் குடும்ப பாரத்தை தானும் சேர்ந்து பங்கு போட்டுக் கொள்ளக் கூடிய ஒரு நல்ல நபரைத் தேர்ந்தெடுத்து, கல்யாணம் செய்து கொள். நிச்சயம் உன் வாழ்க்கை சோபிக்கும்.

- ஆர்.பஞ்சவர்ணம், போளூர்

குடும்பத்துக்காக, படிப்பையும், வாழ்வையும் தியாகம் செய்து கொண்டிருக்கும் நீ, போற்றுதலுக்குரியவள். ஆனால், ஒரு ஆணுக்காக கசப்பு, வெறுப்பு, எரிச்சல், கோபம் என்று எல்லாவற்றையும் மனதில் ஏற்றிக் கொண்டு, தற்போது தூற்றுதலுக்குரியவளாக மாறிக் கொண்டிருப்பது கொடுமை. உன் குடும்பத்தை நல்லதொரு நிலைக்குக் கொண்டு வரும்வரை நிதானத்தை இழக்காதே. வீணான ஆசைகளினால் உன் குடும்பமும் உன் எதிர்காலமும்தான் கேள்விக்குள்ளாகும். நடந்ததை எண்ணிக் கலங்காமல், கடமையை செய். பக்குவப்பட்ட மனதுக்கு ஏற்ற மணாளனை தேர்ந்தெடுத்து, திருமணம் புரிந்து கொள். இதுவே உன் வாழ்வின் நிரந்தர மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

- ஜோஸப்பின், கோவை

என் டைரி 239-க்கான வாசகிகளின் ரியாக்ஷன்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism