Published:Updated:

Robot Fish : நுண் பிளாஸ்டிக் தின்னும் ரோபோ மீன்; சீன விஞ்ஞானிகளின் ஆச்சரிய கண்டுபிடிப்பு!

மீனில் உள்ள நுண் பிளாஸ்டிக்

நுண் பிளாஸ்டிக்கை விழுங்கும் இந்த ரோபோ மீன் தொடுவதற்கு மென்மையாகவும், வெறும் 1.3 சென்டிமீட்டர் (0.5 அங்குலம்) அளவிலும் உள்ளது.

Robot Fish : நுண் பிளாஸ்டிக் தின்னும் ரோபோ மீன்; சீன விஞ்ஞானிகளின் ஆச்சரிய கண்டுபிடிப்பு!

நுண் பிளாஸ்டிக்கை விழுங்கும் இந்த ரோபோ மீன் தொடுவதற்கு மென்மையாகவும், வெறும் 1.3 சென்டிமீட்டர் (0.5 அங்குலம்) அளவிலும் உள்ளது.

Published:Updated:
மீனில் உள்ள நுண் பிளாஸ்டிக்
கடலில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்ஸ் எனப்படும் நுண் நெகிழிகள் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. அதன் நுண்ணியத் தன்மையால், பார்ப்பதற்கும், சுத்தம் செய்வதற்கும் கடினமாக இருக்கிறது. மேலும், இது மீன்களால் உண்ணப்படுவதால் அம்மீன்களுக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
பிளாஸ்டிக் சூழ் கடல்
பிளாஸ்டிக் சூழ் கடல்

ஆனால், தென்மேற்கு சீனாவில் உள்ள சிச்சுவான் பல்கலைக்கழகத்தின் சீன விஞ்ஞானிகள் குழு நல்ல செய்தி ஒன்றை அறிவித்திருக்கிறது. நுண் பிளாஸ்டிக்கைச் “சாப்பிடும்” ரோபோ மீன் ஒரு நாள் உலகின் மாசுபட்ட கடல்களைச் சுத்தம் செய்ய உதவும் என்று அந்தக் குழு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நுண் பிளாஸ்டிக்கை விழுங்கும் இந்த ரோபோ மீன் தொடுவதற்கு மென்மையாகவும், வெறும் 1.3 சென்டிமீட்டர் (0.5 அங்குலம்) அளவிலும் உள்ளது. இந்த ரோபோ மீனானது கடல்நீரிலுள்ள மாசுபாடு குறித்த தகவல்களை வழங்கும் என்கிறார்கள். ஆழமற்ற நீரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றிபெறவே, கடலின் ஆழமான பகுதிகளிலும் இந்த ரோபோ மீனைச் செலுத்தி நுண் பிளாஸ்டிக்கை உறிஞ்சத் திட்டமிட்டுள்ளனர்.

மீனில் உள்ள நுண் பிளாஸ்டிக்
மீனில் உள்ள நுண் பிளாஸ்டிக்

சாதாரண மீனை போலவே துடுப்புகளைக் கொண்டு இயங்கும் இந்த ரோபோ மீன்கள், மென்மையான பாலியூரிதீன் மூலம் உருவாக்கப்பட்டுள்ளதால் கடல்வாழ் உயிரினங்களால் இந்த ரோபோ மீன் மற்ற மீன்களால் உண்ணப்பட்டாலும் எந்தவித சிக்கலும் இல்லாமல் ஜீரணிக்கப்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், இந்த ரோபோக்களைக் கொண்டு மனித உடலில் உள்ள கிருமிகளையும் அகற்ற முடியும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

செயற்கை துணிகள், மீன் வலைகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் உணவுப் பொட்டலங்கள் ஆகியவை மைக்ரோபிளாஸ்டிக்ஸின் பொதுவான ஆதாரங்களில் ஒன்றாகும். 24.4 டிரில்லியன் மைக்ரோபிளாஸ்டிக் துண்டுகள் பெருங்கடல்களின் மேல்பகுதியில் இருப்பதாகவும் அவற்றின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருவதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.

நுண் பிளாஸ்டிக்
நுண் பிளாஸ்டிக்

கடல் விலங்குகள் பெரும்பாலும் அவற்றை உணவு என்று தவறாகப் புரிந்துகொண்டு நோய்வாய்ப்படுகின்றன. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 1,00,000 கடல் பாலூட்டிகள் இவற்றால் கொல்லப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்த ரோபோ மீனின் கண்டுபிடிப்பு கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க உதவும் என்று நம்பலாம்.