Published:Updated:

உயிரினங்கள் தோன்றியது எப்படி? விரைவில் தொடங்கும் இந்தியாவின் ஆழ்கடல் ஆய்வு!

Deep Ocean ( Photo by Jeremy Bishop from Pexels )

``கடலில் நான்கு முதல் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள நீர் வெப்ப துவாரங்களில் உயிர்கள் தோன்றியதாகக் கோட்பாடுகள் உள்ளன. கடல் ஆழத்தில் முற்றிலும் இருட்டாக இருக்கிறது. ஆனால், அங்கே உயிரினங்கள் உள்ளன."

உயிரினங்கள் தோன்றியது எப்படி? விரைவில் தொடங்கும் இந்தியாவின் ஆழ்கடல் ஆய்வு!

``கடலில் நான்கு முதல் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள நீர் வெப்ப துவாரங்களில் உயிர்கள் தோன்றியதாகக் கோட்பாடுகள் உள்ளன. கடல் ஆழத்தில் முற்றிலும் இருட்டாக இருக்கிறது. ஆனால், அங்கே உயிரினங்கள் உள்ளன."

Published:Updated:
Deep Ocean ( Photo by Jeremy Bishop from Pexels )

பூமியில் உயிரினங்கள் எவ்வாறு தோன்றியது என்பது குறித்து ஆய்வு செய்வதற்காக இந்தியா, ஆழ்கடல் ஆய்வை விரைவில் தொடங்கவுள்ளது.

கடல் எந்த அளவுக்கு அழகு என்று சொல்லப்படுகிறதோ அதே அளவுக்கு அதன் ஆழத்தில் பல அபூர்வமான விஷயங்களும் உள்ளன. கடலில் உயிரினங்களின் தோற்றம் மர்மங்கள் நிறைந்த ஒன்றே. இந்நிலையில், இந்த மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்க்க இந்த ஆய்வு உதவும் என நம்பப்படுகிறது. இந்த ஆய்வின் மதிப்பு சுமார் ரூ.4,077 கோடி.

Deep Ocean
Deep Ocean
Photo by Blaque X from Pexels

இந்த ஆய்வின் முதற்கட்டமாக, 500 மீட்டர் ஆழத்துக்கு பயணிக்கும் விஞ்ஞானிகள் ஆழமாக மூழ்கி, அந்த நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை ஆய்வு செய்ய உள்ளனர். இதையடுத்தே கடலின் மேற்பரப்பிலிருந்து ஆழ் கடல் நோக்கி 6,000 மீட்டர்கள் வரை விஞ்ஞானிகள் பயணிக்க உள்ளனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இதுகுறித்து புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் எம் ரவிச்சந்திரன், ``கடலில் நான்கு முதல் ஐந்து கிலோமீட்டர் ஆழத்தில் உள்ள நீர் வெப்ப துவாரங்களில் உயிர்கள் தோன்றிய தாகக் கோட்பாடுகள் உள்ளன. கடல் ஆழத்தில் முற்றிலும் இருட்டாக இருக்கிறது. ஆனால், அங்கே உயிரினங்கள் உள்ளன.

Deep Ocean
Deep Ocean
Photo by Emma Li from Pexels

அந்த ஆழத்தில் உயிர்கள் எப்படி பிறக்கின்றன, உயிர்கள் எப்படி வாழ்கின்றன என்பது போன்ற கேள்விகளைப் புரிந்துகொள்ள இந்த ஆழ்கடல் ஆய்வு உதவும். மேலும், கடலின் ஆழத்தில் உள்ள உலோகங்கள், கனிமங்கள் போன்ற வளங்களைக் கண்டறியவும், இந்திய கடல் படுக்கையை வரைபடமாக்கவும் உதவும். இந்த ஆய்வின்போது பயன்படுத்தப்படும் கருவிகள் தொழில் நுட்பங்களின் வளர்ச்சிக்கு உதவும். இந்தப் பணியின்போது பெரும்பாலும் உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும்" என்றார்.