Published:Updated:

``எல்லாத்தையும் செய்ய முடியாது; உண்மையை சொல்லிவிடுகிறேன்"- கார்த்தி சிதம்பரம்!

karti chidambaram
karti chidambaram

எல்லா திட்டத்தையும் என்னால் நிறைவேற்ற முடியாது. ஆனால் உரியவர்களிடம் பிரச்னைகளை கொண்டு சேர்ப்பேன் என்று கிராம சபை கூட்டத்தில் நம்பிக்கை தெரிவித்தார் கார்த்தி சிதம்பரம்.

சிவகங்கை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தொகுதிக்கு உட்பட்ட இடங்களில் சுகந்திர தின நிகழ்ச்சிகளிலும் கிராப சபை கூட்டங்களிலும் கலந்துகொண்டார். கல்லல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கூத்தலூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் அப்பகுதி மக்கள் மனு அவரிடம் மனு அளித்தனர்.

karti chidambaram
karti chidambaram

மனுவை பெற்றுக்கொண்ட கார்த்தி சிதம்பரம்..., " இப்பகுதியில் தண்ணீர் பிரச்சையும், சட்ட விரோதமாக மது விற்பனையும் அதிகப்படியான புகாரக உள்ளது. இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்கிறேன். தண்ணீர் பிரச்னைக்கு 15 நாட்களில் அதிகாரிகள் தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளனர்.

அவர்கள் செயல்படுத்தவில்லை என்றால் என்னிடம் புகாராக பொதுமக்கள் தெரிவிக்கலாம். யூக்கலிப்டஸ் மரத்தின் மூலம் சிவகங்கை மாவட்டம் பாதிப்படைவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதில் நான் நேரடியாக தலையிட முடியாது. கலெக்டரிடம் இது தொடர்பாக மனு அளிக்கிறேன். மருத்துவ வசதிகள் ஏற்படுத்துவது தொடர்பாக நடவடிக்கைகள் எடுக்கப்படும். கல்விக் கடனை என்னால் தள்ளுபடி செய்யமுடியாது அதனை ஆட்சியாளர்கள் தான் செய்ய வேண்டும்.

karti chidambaram
karti chidambaram

வேண்டுமானால் நான் கல்வி உள்ளிட்ட முக்கிய தேவைகளுக்கு வங்கி மூலமாக லோன் பெற்றுத்தர முடியும். அதற்காக முறையாக மனு அளித்தால் செயல்படுத்துகிறேன். எல்லா குறைகளையும் பரிசீலனை செய்து. அதிகாரிகளிடம் நேரடியாக சென்று பிரச்னைகளை தெரிவித்து தீர்வு காண முயற்சிக்கிறேன்.

ஒரே நாளில் எல்லாத்தை மாற்ற முடியாது. உண்மையை சொல்லிவிடுகிறேன். என்னால் முடிந்த உதவிகளை கண்டிப்பாக தொகுதி மக்களுக்கு செய்வேன்'' என்று இயல்பை மக்களிடம் சொல்லி பாரட்டுக்களை பெற்றார்.

karti chidambaram
karti chidambaram

பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், "வேற்றுமையை ஒழிக்கும் விதமாக பள்ளி மாணவர்கள் கயிறு கட்டுவதற்கு தடை விதிப்பது வரவேற்க வேண்டிய விஷயம். அதன் சுற்றறிக்கை பற்றி முழுமையாக படிக்கவில்லை" என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு