ரசவாதம்!


இப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!
ரசவாதம்!

ஹார்லி டேவிட்சன் பைக்குகள் நம்நாட்டுக்குள் வர இன்னும் ஏராளமான தடைகள் உள்ளன. மத்திய அரசு மனது வைத்தால்தான் அது இங்கே வரமுடியும். அதுவரை நம்மூர் பைக்குகளை ஹார்லி டேவிட்சன் மாதிரி ரீ-டிஸைன் செய்து ஓட்டி, திருப்தியடைய வேண்டியதுதான்!

என்ஃபீல்டு நிறுவனத்தின் புல்லட்டை ஹார்லி டேவிட்சனாக்கி இருக்கிறார், ரீ-டிஸைனர் பாபு. ''கஸ்டமர் ஒருவர் என்னிடம் ஹார்லி டேவிட்சன் போட்டோவைக் காட்டி, 'இதுல இருக்கிற மாதிரி இந்த புல்லட்டை மாத்திக் கொடுங்க'ன்னு சொன்னார். இதை ஒரு சவாலா எடுத்துக்கிட்டு தேவையான உதிரி பாகங்களைச் சேகரிக்க ஆரம்பிச்சோம். அலாய் வீலையும் டயர்களையும் தைவானிலிருந்து வாங்கினோம். சில பாகங்களை லேத்தில் செய்தோம்'' என்ற பாபுவிடம், ''ஹார்லி டேவிட்சனில் உள்ளது போலவே இன்ஜின் இருக்கிறதே, எப்படி?'' என்று கேட்டோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick