மக்களின் மனம் கவர்ந்த கார் எது?


மக்களின் மனம் கவர்ந்த கார் எது?

தேர்தல் கருத்துக் கணிப்புகள் போல 'சி.என்.பி.சி.ஆவாஸ்' டிவி வெளியிடும் 'வாடிக்கையாளர் திருப்தி குறியீடு' (Consumer Satisfaction Survey) இப்போதெல்லாம் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகிறது.

இப்போது வெளியாகியிருக்கும் வாடிக்கையாளர் திருப்தி குறியீட்டில், முதலிடத்தில் இருக்கும் கார் எது? எல்லா கார்களையும் ஒரே தராசில் வைத்து எடைபோடக் கூடாது என்பதால், சந்தையில் இருக்கும் கார்களை சின்ன கார்கள், செடான் கார்கள், பிரிமியம் செடான் கார்கள், மல்டி யுட்டிலிட்டி வாகனங்கள் (MUV) என்று நான்கு பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டது, சி.என்.பி.சி.ஆவாஸ்.

இதில் சின்ன கார்கள் பிரிவில்... வாகனங்களின் செயல்பாடு, ஏராளமானவர்களைத் திருப்திப்படுத்தி இருக்கிறது. ஆனால், விற்பனைக்குப் பிறகு உள்ள சர்வீஸ்தான் பலரை முகம் சுளிக்கவைத்திருக்கிறது. சரி... இந்தப் பிரிவின் வின்னர் யார்? ஹ¨ண்டாய் கெட்ஸ், மாருதி ஆல்ட்டோ ஆகிய இரு கார்களோடும் கடுமையாகப் போட்டிப் போட்டு, வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்தும் சிறந்த காராக, 'மாருதி வேகன் ஆர்' தேர்வாகி இருக்கிறது. செடான் பிரிவில், செவர்லே ஆப்ட்ரா, ஹ¨ண்டாய் வெர்னா மற்றும் ஃபோர்டு ஃபியஸ்டா ஆகிய கார்களை நூலிழையில் முந்திக்கொண்டு முதல் இடத்தைப் பிடித்திருக்கிறது, ஹோண்டா சிட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick