SANTRO: பழைய கார்


HYUNDAI SANTRO பழைய கார்
மனம் விரும்புதே!

ழைய கார் மார்க்கெட்டில் அதிக டிமாண்ட் உள்ள கார் என்றால், அது ஹ¨ண்டாய் சான்ட்ரோ. சிறிய கார் வகையில் வீழ்த்த முடியாத ஹீரோவாக கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இருக்கிறது, சான்ட்ரோ!

'ஸ்மூத் இன்ஜின், பயன்படுத்த சுலபமான கியர்பாக்ஸ், அருமையான கையாளுமை அனுபவம் என மனம் விரும்பும் விருந்தாளி' என்கிறார்கள் வாடிக்கையாளர்கள். குறிப்பாக, நகரப் பயன்பாட்டுக்கு மிகவும் சரியான சாய்ஸ். பூட் பெரிதாக இல்லையென்றாலும் போதுமான அளவுக்கு பொருட்களைவைக்க இடம் உண்டு. உள்பக்க பிளாஸ்டிக் பொருட்களின் தரமும் சிறப்பாக இருக்கிறது.

இதன் பலவீனம் என்றால், ஓட்டுதல் அனுபவம்தான். பின்பக்க இருக்கைகளில் அமர்ந்து செல்லும்போது, அலுங்கல் குலுங்கல்களைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick