மோட்டார் விகடன் நடத்திய.. ரேஸ் கோர்ஸ் திருவிழா!


சீறும் பைக்குகள் இல்லை... பறக்கும் கார்கள் இல்லை... ஆனால், கோலாகலமாக, உற்சாகமாக, வித்தியாசமாகத் துவங்கியது சென்னையில் 'மோட்டார் விகடன்' ரேஸ் கோர்ஸ் திருவிழா!

''சென்னை அண்ணாசாலையும் கண்களுக்கு ரேஸ் டிராக் போலத் தெரிகிறதா... ஆக்ஸிலரேட்டரில் கை வைத்ததும் தானாக விரல்கள் முறுக்கேறுகின்றனவா...

கியர்களைப் பார்த்தால் கிக் ஏறுகிறதா... 'வ்ர்ர்ரூம்ம்' என்ற சத்தம்தான் உங்களுக்குப் பிடித்த இசையா... உங்கள் கனவில் வருபவர்கள் எல்லாம் ரேஸ் வீரர்களா..? நிச்சயம் உங்களுக்கு இருப்பது ரேஸ் ஜுரம்தான்! வாருங்கள் ரேஸ் வீரராகலாம்!'' என்ற மோட்டார் விகடனின் விளம்பரத்தைப் பார்த்துவிட்டு, கல்லூரி மாணவர்கள், ஆட்டோமொபைல் ஆர்வலர்கள் என அத்தனை பேரும் ஒன்று திரள களைகட்டியது முட்டுக்காடு படகுக் குழாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick