உல்லாசப் பயணம்!: சென்னை to புதுச்சேரி


சென்னையில் இருந்து 162 கி.மீ தொலைவில் இருக்கிறது புதுச்சேரி. இங்குதான் இந்த மாத உல்லாசப் பயணம் என்றதுமே நம் அலுவலக சகாக்கள், 'ஆஹா... கிளம்பிட்டாங்கய்யா... கிளம்பிட்டாங்க' என்று வடிவேலுவாக மாறி கலாய்த்தார்கள்.

சர்வதேச நகரமாக விளங்கும் ஆரோவில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிக்கமேடு ஆகிய இடங்களை குறிவைத்துதான் நம் பயணம் துவங்கியது.

சென்னையிலிருந்து கடற்கரை ஓரமாக நீளும் கிழக்குக் கடற்கரைச் சாலையைப் பற்றி அதிக அறிமுகம் தேவையில்லை. திருவான்மியூரைத் தாண்டினாலே விடுமுறைக் கொண்டாட்டம் தொற்றிக்கொள்ளும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick