கல்யாண கார் பார்க்கச் செல்லலாமா?


கல்யாண கார் பார்க்கச் சொல்லலாமா?

து என்னமோ தெரியலைண்ணே... எனக்கு மட்டும் இம்புட்டு வருஷமா கல்யாணமே ஆகல. ஊர்ல இருக்குற இத்தனூண்டு பொடிசுக மொதக்கொண்டு நம்மள 'முத்துன கத்திரிக்கா'னு நக்கல் பண்ணுறாய்ங்க. நான் எந்தப் பொண்ண போய்ப் பாத்தாலும் அடுத்த மாசமே அதுக்குக் கல்யாணம் ஆயிடுது.

இதை ஒரு சென்டி-மென்டாவே ஊருக்குள்ள உருவாக்கி, நமக்கு உலை வெக்கிறாய்ங்க.

சரி, நாமளே எங்குட்டாவது ஒரு பிகர மெயின்டெயின் பண்ணிரலாம்னு பாத்தா, அதுக்கும் வழியில்லை. ஏன்னா, நம்ம பர்சனாலிட்டி அப்பிடி. சோகமே சொழட்டிச் சொழட்டி அடிச்சுக்கிட்டு இருக்குறப்போ, மாமன் பொண்ணு வடிவு மூலமா எனக்கும் ஒரு விடிவு காலம் வந்துச்சு. ஒரு நா மூச்சூடும் என் மாமன் வீட்டு வாசல்ல உக்காந்து மூக்கச் சிந்தி சிந்தி அழுதேன். அதப்பாத்து அவரோட பொண்ண குடுக்கச் சம்மதிச்-சுட்டாரு. எப்பிடி நம்ம கெட்டிக்காரத்-தனம் பாத்தீங்களா? இந்த ஊர்காரய்ங்க நம்மள எப்பிடி-யெல்லாம் சத்தாய்ச்-சிருப்பாய்ங்க. வாங்கடி வாங்க, வந்து மொய்- எழுதிட்டு கொட்டிகிட்டுப் போங்க. இந்தத் தீப்பொறி திருமுகத்துக்கு இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம். ஊர்க்காரப் பயக அம்புட்டு பேரும் மூக்குல விரல வைக்கிறமாதிரி கார்ல ஊர்வலமா வரணும்ணே. அதுக்கு காரை வாடகைக்கு எடுக்கத்தான் இப்ப போய்க்கிட்டு இருக்கேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick