'ஐ' பஸ்!


i BUS
'ஐ' பஸ்!

ஸ் என்றாலே, காத்திருப்பதும், கூட்ட நெரிசலும்தான் ஞாபகத்துக்கு வரும். இப்போது தாழ்தளப் பேருந்து, சொகுசுப் பேருந்து, குளிர்ப் பேருந்து என விதவிதமாக வந்தாலும் கூட்டம் மட்டும் குறையவே இல்லை. ஆனால், கர்நாடகா அரசு வால்வோ பஸ்ஸையே சொகுசு டவுன்பஸ் ஆக்கிவிட்டது. அவை பெங்களூருவில் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இதைப் போன்ற ஒரு பஸ்ஸை, சென்னை அசோக் லேலண்ட் நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. இதைப் பார்ப்பவர்கள் 'ஐ...' என்று ஆச்சர்யப்படும் அளவுக்கு கண்ணாடி மாளிகை போல அழகாக இருக்கிறது. இதற்கு 'ஐ பஸ்' என்று பெயரும் சூட்டியிருக்கிறது.

'இந்தப் பெயரில் இருக்கும் 'ஐ' என்ற ஆங்கில வார்த்தை Intelegent, Innovation, India...போன்ற வார்த்தைகளின் முதல் எழுத்து மட்டுமல்ல... i pod, i10 மாதிரி புதுமையின் அடையாளம்' என்கிறது அசோக் லேலண்ட்!

தொழில்நுட்பங்கள் நிறைந்த இந்த பஸ்ஸின் மாதிரி வடிவத்தை சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பத்திரிகையாளர்களுக்குக் காட்டினார்கள். இதில், விமானங்களில் இருப்பது போல எக்கானமி, எக்ஸிகியூட்டிவ் என இரண்டு வகுப்புகள் இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick