என் கடன் பணி செய்து கிடப்பதே!


வாகனக் கடன் கேள்வி - பதில்
என் கடன் பணி செய்து கிடப்பதே!

மோட்டார் சைக்கிளில் செல்பவர்களுக்கு 'கார் வாங்கும் ஆசை'யைத் தூண்டிவிடுவது, சின்ன கார் வைத்திருப்பவர்களை, 'மிட் சைஸ் கார் வாங்கலாமா?' என்று யோசிக்க வைப்பதெல்லாம் வங்கிக் கடன்களே! இது மட்டுமா? மோட்டார் சைக்கிள், கமர்ஷியல் வாகனம். கனரக வாகனம் என்று பலதரப்பட்ட வாகனங்களும் வங்கிக் கடனில்தான் வாங்கப்படுகின்றன!

ஆட்டோமொபைல் கடன்கள் பற்றி வாசகர்கள் நமக்கு எழுதி அனுப்பிய கேள்விகளோடு, மும்பையிலுள்ள ஐசிஐசிஐ வங்கியின் தலைமை அலுவலகத்துக்குச் சென்றோம். இது, பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸில் பல ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாகப் பரந்து விரிந்திருக்கிறது. அங்கு 'என் கடன் பணிசெய்து கிடப்பதே' என்று அமர்ந்திருந்த என்.ஆர். நாராயணனைச் சந்தித்தோம். இவர்தான் 'வாகனக் கடன்'களுக்கான உயர் அதிகாரி.

''வாகனக் கடன்கள் கொடுப்பதை வங்கிகள் குறைத்துவிட்டதாகச் செய்திகள் வருகிறதே! இது உண்மையா?''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick