இயந்திரம் பேசுகிறது: இன்ஜின்!


இயந்திரம் பேசுகிறது
பயரிங் ஆர்டர்!

யிர்த் துடிப்புள்ள காமெடிக்கு மிக மிக முக்கியம், டைமிங். உயிரற்ற நான் மிகச் சீராக இயங்கு வதற்குக் காரணமும் இதே டைமிங்தான்! என் டைமிங்கில் சிறிதளவு மாறுபாடு ஏற்பட்டாலும், எரிபொருள் விரயமாகும். இழுவைத் திறன் பாதிப்படையும். சில சமயம் இயக்கமே நின்றுபோய், நானும் சேதமாகிவிடுவேன். அதனால், டைமிங் பற்றிச் சொல்ல இதுதான் சரியான டைம்!

1.. 4.. 3.. 2..

என்னுள் வரிசையாக இருக்கும் சிலிண்டர்களில் கம்ப்ரஸன் நடக்கும் வரிசைமுறை என ஒன்று உண்டு. அதாவது, எனக்குள் 4 சிலிண்டர்கள் இருந்தால், அதில் எந்த சிலிண்டர் முதலில் பவர் ஸ்ட்ரோக்கில் இருக்கிறது என்பதை நிர்வகிப்பது முக்கியம். பெரும்பாலும் இது 1, 4, 3, 2 ( i love you da) என்ற வரிசையில் இருக்கும். அதாவது, என்னில் இருக்கும் முதல் சிலிண்டர் வெடித்தால், அடுத்து வெடிப்பது 4-வது சிலிண்டர். அடுத்து 3... 2. இந்த வரிசை முடிந்ததும் மீண்டும் முதல் சிலிண்டர் என ஆரம்பிக்கும். ஆக, இதைத்தான் 'பயரிங் ஆர்டர்' என்கிறோம். இந்த வரிசை ஆட்டோமொபைல் உலகில் கடைப்-பிடிக்கப்படும் பொதுவான முறை என்றாலும், சில வகை வாகனங்களில் மாறலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick