ஊட்டியில் உலவும் அந்தக் காலங்கள்!


    '
ஊட்டியில் உலவும் அந்தக் காலங்கள்!

ங்கேயாவது ஒரு பழைய மாடல் காரைப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கும். ஆனால், ஊட்டி சாலையில் விதவிதமான பழங்காலத்து கார்கள் சர்வசாதாரணமாகப் பறக்கின்றன. அதில் ஒரு காரை மடக்கி, அதன் ரிஷிமூலம் பற்றி விசாரிக்க முனைந்தபோது, ‘‘ரஜினிகாந்தைக் கேளுங்கள்’’ என்று பளிச்சென பதில் வந்தது. ‘ஆகா, சூப்பர் ஸ்டாருக்கு இப்படி ஒரு ஏரியா இருக்கிறதா?’ என எண்ணி, ‘‘அவர் என்ன ஊட்டியிலா இருக்கிறார்?’’ எனக் கேட்டோம். ‘‘ஆமாம், ஆர்டிஓ (வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்) ஆபீஸில் கேளுங்கள்’’ எனப் பதில் வந்தது. ஏற்கெனவே ஊட்டி குளிரில் நடுங்கிக்கொண்டு இருந்த நமக்கு, இப்போது குழப்பத்தில் தலை கிறுகிறுக்கத் துவங்கியது.

Click to enlarge

சரி, அங்குபோய்தான் பார்ப்போமே என ஆர்டிஓ அலுவலகத்தை விசாரித்துக்கொண்டு உள்ளே நுழைந்தோம். எதிர்பட்டவரிடம் ‘‘ரஜி..னி...’’ என்று இழுத்ததும் அங்கிருந்த ஓர் அறைக்குள் நம்மை அழைத்துச் சென்றார். உள்ளே ஒருவர் அமர்ந்திருந்தார். அவர்தான் ஊட்டியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராகப் பணிபுரியும் ரஜினிகாந்த்!

ஒரு லட்ச ரூபாய்க்கு கார்கள் வந்துவிட்ட இந்தக் காலத்தில், அடுத்து என்ன மாடல் வரப்போகிறது என எதிர்பார்ப்பவர்களிடையே, பழமையான கார்களைத் தேடிப்பிடித்து வாங்குகிறார் இவர். ஒன்றுக்கும் உதவாமல் இடத்தை அடைத்துக்கொண்டு நிற்கும் கார்களை வாங்கி, பழைய நிலைக்கு உருமாற்ற ஏராளமாகச் செலவு செய்கிறார். அதை சாலையில் ஓடவைத்து ஒய்யாரமாகச் சவாரி செய்துவிட்டுத்தான் ஓய்வாராம் இந்த ரஜினிகாந்த். அவரிடம் இருக்கும் ஆதிகாலத்து கார்களைப் பற்றி விசாரித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick