சிறிய காரில் சொகுசு பங்களா!


    '
சிறிய காரில் சொகுசு பங்களா! HONDA JAZZ

சிறிய காரைப் பற்றி அதிகம் அலட்டிக்கொள்ளாத கார் நிறுவனங்களை-யெல்லாம் இந்தியாவின் சின்ன கார் மார்க்கெட் யோசிக்க வைத்துவிட்டது. லட்ச ரூபாய் கார் அளவுக்குக் கோதாவில் இறங்கிவர முடியாவிட்டாலும், சொகுசு கார்களுக்குப் பிரபலமான சர்வதேச கார் நிறுவனங்களெல்லாம், இந்த ஆட்டோ எக்ஸ்போவில் தங்களின் சின்ன கார் திறமையை வெளிச்சம் போட்டுக் காட்டின. கனவான்கள் மத்தியில் மட்டுமே விற்பனையாகிவரும் ஹோண்டா, நடுத்தர மக்களைக் குறிவைத்து ‘ஜாஸ்’ என்ற காரை அறிமுகம் செய்தது.

ஏரோடைனமிக் டிஸைன் என்பதைப் பறைசாற்ற காரின் உடம்பு முழுவதும் விமானத்தின் இறக்கை-களை நினைவுபடுத்தும் க்ரீஸிங், காருக்குக் கம்பீரம் சேர்க்கிறது. பின்பக்க ஸ்பாய்லர், சாய்வாகக் காணப்படும் விண்ட் ஸ்க்ரீன் ஆகியவை இதற்கு ஸ்டைலான ஸ்போர்ட்ஸ் கார் தோற்றத்தை அளிக்கிறது.

சிறிய காருக்குள் ஒரு சொகுசு பங்களா வசதியை உருவாக்கி இருக்கிறது ஹோண்டா. இருக்கைகளில் உட்காருவதே சுகம் என்று நினைக்கும் அளவுக்கு நம்மைப் பொதிந்துகொள்ளும் மெத்தையாக

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick