லட்ச ரூபாய் காரில்லை... மைலேஜ் கார்!


    '
bajaj LITE லட்ச ரூபாய் காரில்லை..
மைலேஜ் கார்!

இரண்டு வீல் ஸ்கூட்டர், 3 வீல் ஆட்டோ என்று படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்ற பஜாஜ், 1 லட்ச ரூபாய் காரான நானோவை டாடா நிறுவனம் உலகுக்கு அறிமுகம் செய்வதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே முந்திக்கொண்டு, ‘லைட்’ என பெயரிடப்பட்ட இந்தச் சிறிய காரை ஜனவரி 8-ம் தேதி மும்பையில் அறிமுகம் செய்தது.

பார்க்க அழகாகவும் சிறியதாகவும் இருந்தாலும் புதுமையாக இருக்கிறது என்று சொல்ல முடியவில்லை. இதன் இன்ஜின் வழக்கம்போல முன் பக்கம்தான். முன்வீல் டிரைவ் சிஸ்டத்தில் இயங்குகிறது. குறைவான விலையில் விற்பனைக்கு வரவேண்டும் என்பதற்காக பின்பக்க இன்ஜின், பின்வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட மாடலையும் பஜாஜ் வெளியிடலாம் என்ற பேச்சும் இருக்கிறது.

டாடா நானோவுடன் ஒப்பிடும்போது பஜாஜ் லைட் சிறியதுதான். டாடா நானோவில் நால்வர் தாராளமாக அமர இடவசதி இருக்கிறது. ஆனால், பஜாஜோ தனது காரை அகலம் குறைவாக வடிவமைத்துள்ளது. மேலும், இதை எடைக் குறைவான காராகவும் ( 600 கிலோ ) தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது. பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜீவ் பஜாஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘இரண்டு பெரியவர்கள், இரண்டு குழந்தைகள் அமரக்கூடிய அளவுக்குத்தான் நாங்கள் கார் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்’’ என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick