டாடா நானோ: இந்தியக் கனவு!


    '

லக ஆட்டோமொபைல் வரைபடத்தில் இந்தியாவை இடம் பெற வைத்திருக்கிறது டாடாவின் லட்ச ரூபாய் கார், நானோ. ஜப்பானியர்களாலும் ஐரோப்பியர்களாலும் ஏன், அமெரிக்கர்களாலும் செய்ய முடியாத ஒரு சாதனையை, நம் டாடா மோட்டார்ஸ் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. இன்னொருபுறம் நாட்டுக்குள்ளே அது ஒரு சந்தோஷமான பிரளயத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு காலத்தில், கிராமத்துச் சாலைகளில் எந்த கார் சென்றாலும் அரை

டிரவுசர் போட்ட சிறுவர்கள் அதை துரத்திக்கொண்டு ஓடி வேடிக்கைப் பார்ப்பார்கள். அது ஓர் இடத்தில் நின்றதும், தொட்டுப் பார்ப்பார்கள். ஆர்வத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளே எட்டிப் பார்ப்பார்கள். டிரைவர் அசரும் நேரம் ஹாரன் அடித்துச் சிரிப்பார்கள். இந்தச் சிறுவர்களின் மனநிலைக்கு நாட்டில் உள்ள நூறு கோடி மக்களையும் தள்ளியிருக்கிறது, டாடாவின் லட்ச ரூபாய் கார் ‘நானோ’!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick