மாதம் ஒரு வழக்கு


    '
மாதம் ஒரு வழக்கு வழக்கறிஞர் வி.யுவராஜ்
வழிகாட்டும் தீர்ப்புகள்

னது கணவர் ஒரு விபத்தில் இறந்ததால், நீதிமன்றத்தில் நஷ்டஈடு கேட்டு வழக்குத் தாக்கல் செய்திருந்தார் புவனேஸ்வரி. ஆறு வருடங்களுக்குப் பிறகு கிடைத்த தீர்ப்பைக் கேட்டு மனமுடைந்து போனார். கணவர் இல்லாத நிலை-யில் இரண்டு குழந்தை-களைக் காப்பாற்ற படாத-பாடுபட்டுக் கொண்டு இருந்த புவனேஸ்வரிக்கு, 60 ஆயிரம் ரூபாய் மட்டுமே நஷ்டஈடு என்றால் தாங்கிக் கொள்ள முடியுமா? நஷ்டஈட்டுத் தொகையை வைத்து, இழந்த வாழ்க்-கையை ஓரளவுக்காவது செப்பனிடலாம் என்ற அவரது நம்பிக்கையில் இடிவிழுந்ததுபோலானது இந்தத் தீர்ப்பு. இனி வருமானத்துக்கு வழி என்ன, குழந்தைகளை எப்படிப் படிக்கவைப்பது என எதிர்காலத்தை நினைத்து நொடிந்துபோய் விட்டார். அப்போது, ‘‘உயர் நீதி-மன்றத்-தில் மேல்முறையீடு செய்யலாம்.

உங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்புக் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

கவலைப்படாமல் இருங்கள்’’ என்று அவரது வழக்கறிஞரும் உறவினர்களும் கொடுத்த தைரியம் மட்டுமே அவருக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. சற்று விவரமாகவே இவருடைய வழக்கைப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick