ரெண்டுல ஒண்ணு போயிருச்சுண்ணே!


    '
ரெண்டுல ஒண்ணு போயிருச்சுண்ணே

ய்யய்யய்ய... ஊராண்ணே இது... சுத்த காவாலிப் பயகளும் ஏமாத்துக்காரப் பயகளுமாத்தேன் இருக்காய்ங்க. ரொம்பச் சூதானமா இருக்கணும்ணே. கொஞ்சம் அசந்தோம்னா அம்புட்டையும் ஆட்டயப் போட்டுர்றாய்ங்க. பாத்தீங்களாண்ணே. செவனேனு இருந்தவன இப்படி சின்னப் புள்ளத்தனமா பொலம்ப விட்டுட்டாய்ங்க!

நான் பாட்டுக்கு நடந்து போய்க்கிட்டு இருந்தேன். ரோட்டோரமா ஒரு சின்ன பொட்டிக்கடை சைஸ¨க்கு கடை போட்டு, போறவன் வர்ற-வனுங்களுக்-கெல்லாம் நோட்டீசு குடுத்துக்கிட்டு இருந்தாய்ங்-கண்ணே. இப்புடி அரக்கப்பரக்க குடுக்குறாய்-ங்--களே, என்னன்னு பாப்போம்னு வாங்கிப் பாத்தேண்ணே. அடியாத்தி, எனக்கு மண்டையே கிறுகிறுனு சுத்திருச்சு. ‘காசே குடுக்காம, பைக்க எடுத்துக்கிட்டுப் போங்க’ன்னு அந்த நோட்டீசுல போட்டுருக்-காய்ங்க.

‘ஆஹா... நம்மூர்ல இலவசமா வேட்டி, சேலை, கலர் டிவி&தானே குடுத்தாங்க. இங்க என்னடான்னா, பைக்குகூட ஓசியா குடுக்குறாய்ங்களே’னு எனக்கா ஒரே அதிசயமாப் போச்சு. ‘சரி, நம்ம ஊரு கிராமம். அங்கயே கலர் டிவி குடுக்-குறாய்ங்க. இது பெரிய டவுனு, அதனால பைக்கு குடுப்பாய்ங்களோனு ‘ஏம்ப்பா, நெசந்தானா’ன்னு கேட்டேன். அவனும். ஆமான்னு தலையை ஆட்டுனான். எந்தக் கடையில குடுக்குறாய்ங்-கன்னு அந்த நோட்டீஸை பாத்துக்கிட்டே யோசிச்-சேண்ணே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick