கிடுகிடுக்கிறது பழைய கார் மார்க்கெட்?


010208
    '
நானோ அறிமுகம்...
கிடுகிடுக்கிறது பழைய கார் மார்க்கெட்?

ழைய கார் மார்க்கெட்டே, ‘பேய் அறைந்த மாதிரி’ கிலி பிடித்துக் கிடக்கிறது. ‘‘லட்ச ரூபாய்க்கு நானோ கார் வரவிருப்பதால், இனி யார் பழைய கார் வாங்கப் போகிறார்கள்?’’ என்று ஒரு பக்கம் பேச்சுக் கிளம்பியது. நானோவின் வரவால், ஷோரூம்களில் விற்பனையாகும் புத்தம்புது மாருதி 800, ஆல்ட்டோ போன்ற சின்ன கார்களின் விலை எல்லாம்கூட மள மளவெனச் சரியும் வாய்ப்புள்ளது. அதனால் பழைய கார் மார்க்கெட் பக்கம் இனி யாரும் போக மாட்டார்கள் என்று ஆளுக்கு ஆள் ஆருடம் சொல்ல ஆரம்பித்தார்கள்.

சரி, உண்மையில் பழைய கார் மார்க்கெட் எப்படி இருக்கிறது? மதுரை, கோவை, சென்னை ஆகிய முக்கிய நகரங்களுக்கு ஒரு மின்னல் விசிட் அடித்து அவசர சர்வே நடத்தியபோது, ‘நாம் கேள்விப்பட்டது ஓரளவுதான் உண்மை’ என்பது புரிந்தது. ஆம்... மாருதி 800, மாருதி ஆல்ட்டோ ஆகிய இரண்டு கார்களைத் தவிர மற்ற கார்களின் விலையில் ‘நானோ’ எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.

சென்னை

‘‘எத்தனை புதிய கார்கள் அறிமுகமானாலும், அது பழைய கார் மார்க்கெட்டைப் பாதிக்காது. ஆனால், புதிதாக அறிமுகமாகும் கார்,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick