வணக்கம்


    '

‘ஹென்றி ஃபோர்டின் சாதனைக்கு இணையான கண்டுபிடிப்பு இது!’ என்றது ஒரு பத்திரிகை. ‘இல்லை இல்லை... சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டதற்கு இணையான கண்டுபிடிப்பு இது!’ என்று வர்ணித்தது இன்னொரு பத்திரிகை. ரத்தன் டாடாவின் லட்ச ரூபாய் லட்சிய காரான நானோவைப் பற்றி இப்படிச் சிலாகித்து வந்த செய்திகளைப் போலவே, ‘இதில் பாதுகாப்பு இல்லை, சுற்றுச்சூழலுக்கு ஆபத்து’ எனத் துவங்கி, சரமாரியான குற்றச்சாட்டுகளும் படையெடுத்தன.

‘‘இல்லை... இது பாரத் ஸ்டேஜ் III என்ற இந்தியத் தரக்கட்டுப்பாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வந்த கார்தான். இது வெளியிடும் புகை, பல ஸ்கூட்டர்கள் வெளியிடும் புகையைவிட குறைவே. பாதுகாப்பிலும் இது சளைத்ததல்ல’’ என்று ரத்தன் டாடா உறுதியளித்துள்ளார். சலசலப்புகள் அடங்கியுள்ளன.

‘‘லட்ச ரூபாய்க்கு காரா! அப்படி என்றால் இன்ஜின், டயர்கள் முதற்கொண்டு அனைத்தையும் உதிரி பாகங்களாகப் பாவித்து, வாடிக்கையாளர்களுக்குத் தனியாக பில் போட்டுக் கொடுப்பார் போலிருக்கிறது!’’ என்று முதலில் உலகமே கிண்டல் அடித்தது. ‘இதெல்லாம் சாத்தியமே இல்லை’ என்று சத்தியமே செய்தன, சின்ன கார் தயாரிப்பதில் கில்லாடிகள் என்று பெயர் பெற்ற ஜப்பான் நிறுவனங்கள். ஆனால், கடந்த ஜனவரி 10&ம் தேதி உலகமே வாயடைத்துப் போகிற மாதிரி, கண்ணுக்குக் குளிர்ச்சியாக, உலகத் தரத்துடன் டாடா நானோவை அறிமுகப்படுத்தியபோது அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கொரியா என்று நான்கு திசைகளிலிருந்தும் ஆகாயம் அளவுக்கு ஆச்சர்யம் விரிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick