பழசுக்கு எப்பவுமே மவுசு!


    '
வின்ட்டேஜ் பைக்ஸ்
பழசுக்கு எப்பவுமே மவுசு!

டந்துபோன இளமையும் நிகழ்வுகளும் என்றும் திரும்பாதவை. ஆனால், அதன் நினைவுகள் நம் நெஞ்சைவிட்டு அவ்வளவு எளிதாக நீங்கிவிடாது. அந்த வகையில் பழைய பைக்குகள் எப்படியிருந்தது, அதை நாம் எவ்வாறு தொலைத்துவிட்டோம் என்பதைப் பார்க்கலாம்.

ராஜ்தூத் ஜிடிஎஸ் 175

1973 -ல் ‘பாபி” திரைப்படம் வெளிவந்தபோது, இந்தியாவுக்கு மூன்று நட்சத்திரங்கள் கிடைத்தனர். ரிஷி கபூர், டிம்பிள் கபாடியா மற்றும் இந்த ராஜ்தூத் 175. எஸ்கார்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இதற்கு ‘மங்கி பைக்’ என்ற செல்லப் பெயரும் உண்டு. பாபி திரைப்படத்தில் ரிஷி கபூர் இதை ஓட்டியதால், அப்போதைய இளசுகளின் மத்தியில் காதலின் அடையாளமாகவே இந்த பைக் உருவெடுத்தது. 1984-ம் ஆண்டோடு இதன் தயாரிப்பு நின்று போனது. இது பிரபலமாக இருந்தபோது, ஒரு சிலர் இதை ‘பாபி பைக்’ என்றுகூட குறிப்பிட்-டார்கள். இதன் பெரிய சைஸ் இன்ஜினால் 9 bhp சக்தியைக் கொடுக்க முடிந்தது. ‘பாபி’ திரைப்படம் வெளிவந்த கால-கட்டத்தில், பிரபலமாக இருந்த பெல்-பாட்டம் பேன்ட் கால ஓட்டத்தில் காணாமல் போனது போலவே, இதுவும் இப்போது காலத்தால் மறக்கடிக்கப்பட்டுவிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick