அல்சர் பிரசன்னாவான பல்ஸர் பிரசன்னா!


    '
பராமரிப்பு
அல்சர் பிரசன்னாவான பல்ஸர் பிரசன்னா!

லயோலா கல்லூரியில் படிக்கும் பிரசன்னாவை, ‘பல்ஸர் பிரசன்னா’ என்றுதான் எல்லோரும் அழைக்கிறார்கள். வகுப்பில் அமர்ந்திருக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் பல்ஸரையும் பிரசன்னாவையும் பிரிக்க முடியாது.

இவர் தனது சகா தியாகுவுடன் சமீபத்தில் வெளியான ‘பில்லா’ படத்தை ‘பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ’ பார்க்கத் திட்டமிட்டு, பல்ஸரில் கிளம்பிப் போனார். பாவம், பாதி வழியில் பல்ஸர் பழுதாகி நின்றுவிட, இருவரும் கடுப்பாகிப் போனார்கள். ‘‘நேத்து வாட்டர் வாஷ்

பண்ணினேன், அதுதான் வண்டி மக்கர் பண்ணுது’’ என்று பல்ஸர் பிரசன்னா, அல்சர் பிரசன்னாவாக மாறி தலையைச் சொறிய, ‘‘ஏன்டா, இந்த மாதிரி சின்னச் சின்ன ரிப்பேரைக்கூட சரிப் பண்ணத் தெரியாதா?’’ என எகிறினார் தியாகு. ‘பில்லாவா, பல்ஸரா’ என்று இருவரும் முட்டிமோதியதில், பல்ஸர்தான் முக்கியம் என முடிவெடுத்த பிரசன்னா, ‘தான் ஒரு பல்ஸர் மெக்கானிக் ஆகியே தீருவது’ என்று சபதம் செய்து, மோட்டார் விகடனை உதவிக்கு அழைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick