அம்மா... நீ ஜெயிச்சுட்டே!


    '
எம்ஆர் எஃப் ரேஸ்
அம்மா... நீ ஜெயிச்சுட்டே!

‘எத்தனை நாளாச்சு... சலூன் கார் ரேஸ் பார்த்து’ என்று ஏங்கித் தவித்த இந்திய ரேஸ் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது, கோயம்புத்தூரில் நடைபெற்ற எம்ஆர்எஃப் இன்டர்நேஷனல் ரேஸ் போட்டி. இரண்டு சுற்றுகளாக நடந்த இந்தப் போட்டியில் ஆண்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, நவாஸ் சந்து என்ற பெண் முதன்முறையாக வெற்றிக்கொடி நாட்டி இருக்கிறார்.

1980-ம் ஆண்டு முதல் 1997-ம் ஆண்டு வரை இந்தியாவில் தேசிய அளவிலான ரேஸ் போட்டிகளை எம்ஆர்எஃப் நடத்திவந்தது. ஆனால், 1997 முதல் அந்த இடத்தை ஜே.கே. டயர் பிடித்துக்கொண்டது. பத்து ஆண்டுகளுக்கு முன் கோட்டை விட்ட இடத்தைப் பிடிக்க இந்த ஆண்டு மீண்டும் களம்

இறங்கியது எம்ஆர்எஃப். ஆனால், ஜே.கே. டயர் போட்டிகளில் பங்கேற்கும் ரேஸ் கார்கள் இதில் இல்லை. ராலி மற்றும் பழைய ரேஸ் பந்தயங்களில் பங்கேற்கும் சலூன் கார்கள்தான் ஹை லைட்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick