கிரேட் எஸ்கேப்: மைசூர்


    '
உல்லாசப் பயணம சென்னை to மைசூர்
மகாராஜாவின் நகரம்!

ந்த முறை நமது பயணத்துக்கு உற்சாகம் தந்தது மஹிந்திரா ரெனோ லோகன். சென்னையில் இருக்கும் எம்பிஎல் மஹிந்திரா நிறுவனத்தில் தயாராக நின்றிருந்த லோகனை எடுத்துக்கொண்டு காலை வேளையில் புறப்பட்டோம் மைசூரை நோக்கி!

நகருக்குள் லோக-னை ஓட்டும்-போது லேசாகத் திணறினாலும் நெடுஞ்சாலையில் சீறுகிறது. சென்னை-மைசூர் பயணத்தை இந்தப் புதிய பாக்ஸ் டைப் காரில் கனஜோராக ஆரம்பித்தோம்.

அருமையான கியர் ஷிப்ட், முன்-புறமும் பின்புறமும் வசதி-யான இருக்கைகள், டிரைவர் இருக்கையை தேவைக்கு ஏற்ற-வாறு அட்ஜஸ்ட் செய்யும் வசதி, பவர் ஸ்டீயரிங், வட்ட வடிவில் ஏஸி வென்ட்கள், சொகு--சான உள்-பக்கத் தோற்றம், சத்தம் போடாத டீசல் இன்ஜின் என வியக்கவைக்கிறது லோகன். ஆனால், 140-க்குமேல் ஆக்ஸில-ரேட்டரை அழுத்தினால், காரின் பாடியில் இருந்து லேசான உதறலை உணர முடிகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick