பஞ்சராகி வந்தேன்!


    '
காமெடி ஷாப்
பஞ்சர் ஒட்டப் போனேன்... பஞ்சராகி வந்தேன்!

‘‘டேய், டேய் மாப்ள... ஒரே ஒரு வாட்டி குடுறா... வண்டிய விழுக்காட்டாம கொண்டு வந்து குடுத்துடுறேன்டா’’ & இப்புடி கெஞ்சி கூத்தாடி, கையப்புடிச்சு காலைப்புடிச்சு... பைக்க ஓசியில வாங்கிகிட்டு வந்தேண்ணே. நண்பன் ரொம்ப யோசிச்சு, ‘‘வண்டிக்கு ஏதாவது ஆச்சு... உன்னையக் கொன்னுபுடுவேன்டா’’ன்னு சொல்லித்தான் குடுத்தனுப்பிச்சான்.

சூதானமாத்தாண்ணே ஓட்டிக்கிட்டு வந்தேன். நம்ம கெரகம் பொசுக்குனு டயரு பஞ்சராயிடுச்சு. டயரு பஞ்சரான உடனே, வண்டி கலகலன்னு ஆட ஆரம்பிச்சுருச்சு. ‘ஐயயோ விழுக இல்ல போறோம்’னு படக்குன்னு முன் பிரேக்கைப் புடிச்சேன் பாருங்க... வண்டி அங்கனகுள்ளேயேதான் நின்னுச்சு. நான்தேன் ஒரு அரை கிலோமீட்டருக்கு அந்தப் பக்கம் போய் விழுந்தேன். டிஸ்க்கு பிரேக்காம்ல... விழுந்த எடத்துல இருந்து விறுவிறுன்னு ஓடியாந்து, வண்டியைத் தூக்கி நிப்பாட்டி சுத்தி முத்தி பாத்தேன். நல்ல வேளை யாரும் பாக்கல.

சரி, சத்தமில்லாம வண்டிக்கு பஞ்சர் போட்டுறலாம்னு பஞ்சர் கடைக்கு தள்ளுறப்பதேன் ஒரு விஷயம் எனக்குத் தோணுச்சு. உள்ளூருக்குள்ள பஞ்சர் போட்டா எப்புடியும் பிரண்டுக்கு தெரிஞ்சுரும். அதனால,

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick