ஸ்டிக்.. ஸ்டிக்.. ஸ்டிக்கர்ஸ்!


    '
அலங்காரம்
ஸ்டிக்.. ஸ்டிக்... ஸ்டிக்கர்ஸ்!

கார் கண்ணாடிகளில்... பந்து மோதி உடைந்ததுபோல, ‘மன்மத ராசா’ பாடலின் சில் அவுட், எட்டிப் பார்க்கும் நாய்க்குட்டி... இது போன்ற ரெடிமேடு ஸ்டிக்கர்களைப் பார்த்துப் பார்த்து அலுத்துவிட்டதா? உங்களுடைய வாகனத்தை நீங்களே அழகுபடுத்திக்கொள்ள முடியும். இதற்கு ‘ஸ்டிக்கர் சத்யா’ மாதிரி ஓர் உதவியாளர் கிடைத்தால், காரை கேன்வாஸாக்கி உங்களால் வண்ணக் கோலமே தீட்டிவிட முடியும்.

‘‘சென்னை மாநகரில் கார் ஸ்டிக்கர்கள் ஒட்டுவதில் பிரபலமாகிவிட்டதால் என்னை ‘ஸ்டிக்கர் சத்யா’ என்று அழைக்கிறார்கள்’’ என்று தன்னைப் பற்றி முன்னுரை கொடுத்தார். இவரிடம், காரில் ஒட்ட விரும்பும் படம், சைஸ், டிஸைன் ஆகியவற்றைச் சொன்னால், அதை அப்படியே அச்சு அசலாக ஸ்டிக்கராகச் செய்து காரில் ஒட்டிவிடுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick