வணக்கம்


    '

உங்கள் மோட்டார் விகடனுக்கு முதல் பிறந்த நாள்.

கார், பைக் பற்றிய தகவல்களைத் தாங்கி வரும் களஞ்சியமாக, என்ன கார், என்ன பைக் வாங்கலாம் என்று ஆலோசனை சொல்லும் கன்சல்டன்டாக, பெட்ரோல் - பராமரிப்புச் செலவைக் குறைக்க வழிசொல்லும் நம்பிக்கைக்குரிய மெக்கானிக்காக - இப்படி மோட்டார் விகடனைப் பல கோணத்திலிருந்து பார்த்துப் படித்து, பாராட்டி சீராட்டி வளர்த்து வருகிறீர்கள்.

நீங்கள் கொடுக்கும் உற்சாகத்தினால்தான் உங்கள் எதிர்பார்ப்புக்கேற்ற தரத்துடனும் துல்லியத்துடனும் மிக நேர்த்தியாக இந்தப் பத்திரிகையை எங்கள் குழுவினர் உருவாக்க முடிகிறது. எங்களைப் போலவே வாகனங்கள் மீதும் மோட்டார் விகடன் மீதும் தீராதக் காதலோடு இருக்கும் உங்களுக்கு, முதல் ஆண்டு நிறைவில் ஸ்பெஷலான நன்றிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick