இயந்திரம் பேசுகிறது: இன்ஜின்!


    '
தொழில்நுட்பம் இயந்திரம் பேசுகிறது புதிய பகுதி

இன்ஜின்... ஓவரா சூடாயிடுச்சு, சீஸ் ஆயிடுச்சு, பெட்ரோல் குடிக்குது, ஆயில் குடிக்குது, ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது, லைஃப் குறைஞ்சுபோச்சு, புகை தள்ளுது, இடிக்கிற சத்தம் கேட்குது...’ - இப்படி என்மீது வாசிக்கப்படும் குற்றப் பத்திரிகைகள் ஏராளம்.

இது போன்ற அபாண்டமான குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதில் சொல்லக்கூடாது என்றுதான் இத்தனை காலம் அமைதியாக இருந்தேன். ஆனால், இதை இப்படியே விட்டுவிட்டால், சிறுமதி படைத்தோர் சிலர்,

‘புவி வெப்பமாவதற்கே (குளோபல் வார்மிங்) இவன்தான் காரணம்’ என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள் போலிருக்கிறது. அதனால், என் மௌனத்தைக் கலைத்துக்கொள்வது என்று முடிவெடுத்துவிட்டேன். ‘இன்ஜின் என்ன இன்ஜினீயரிங்கா படித்திருக்கிறது? இந்த அளவுக்கு டெக்னிக்கலாகப் பேசுகிறதே!’ என்று நீங்கள் கிண்டலடிக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில், என் தரப்பு வாதத்தை உங்கள் முன் எடுத்துவைக்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick