தீவுத்திடலில் திகில் காட்சிகள்!


தீவுத்திடலில் திகில் காட்சிகள்!

ன்றைய தினம் சென்னை தீவுத்-திடலில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பைக் ரசிகர்கள் ஆர்வத்துடன் கூடியிருந்தனர். மாநாடு, பொதுக்கூட்டம், பொருட்காட்சி, விளையாட்டுகள், வேடிக்கைகள் என நடக்கும் தீவுத்திடலில் டிவிஎஸ் டயர்ஸ் நிறுவனம், ஓர் அட்டகாசமான பைக் ஸ்டன்ட் ஷோவை நடத்தி அனைவரையும் பரவசப்படுத்தியது.

இப்படியெல்லாம்கூட பைக் ஓட்ட முடியுமா என மூக்கின் மேல் விரல் வைத்தனர் பார்வையாளர்கள். 'இரண்டு வீலில் ஓட்ட மாட்டோம்' எனச் சபதம் எடுத்தவர்கள் போல, ஒவ்வொருவரும் விதவிதமாக ஒற்றை வீலில் ஓட்டிக் காட்டி அசத்தினர். முன் வீலைத் தூக்கி ஓட்டுவது, பின் வீலைத் தூக்கி நிறுத்துவது, டேங்க் மீது உட்கார்ந்து முன் கால்களை ஹேண்டில் பாருக்கு வெளியே தொங்கவிட்டு ஓட்டுவது, வீலிங்கில் டபுள்ஸ் செல்வது, இரு கால்களையும் தூக்கி விமானத்தின் இறக்கைகளைப் போலவே வீலிங் செய்வது- இப்படி விநோதமான பல சாகசங்களைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

இதில் அபிஷேக் என்பவர் பல்ஸர் 200 பைக்கில், முன் வீலை லாகவமாகத்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick