புல்லட் பற.. பற...!


புல்லட் பற... பற...!

புல்லட் என்றால் நம் நினைவுக்கு வருவது ஆஜானுபாகுவான தோற்றம், கம்பீரம், அசராத உறுதி, அதிக சக்தி ஆகியவைதான். ஆனால், 'அதோடு இந்தியாவின் ஹார்லி டேவிட்சன் என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள்' என்கின்றனர் புல்லட் ரீ-டிசைனர்களான பத்ரியும் சுரேஷ§ம்! 'இந்தியாவின் ஹார்லி டேவிட்சன் என்று புல்லட்டை மட்டும்தான் கொண்டாட முடியும். அதற்குதான் அனைத்து தகுதிகளும் இருக்கின்றன' என்கின்றனர்.

இந்த இரு நண்பர்களின் ஐடியாவில் உருவான பைக்கை, புல்லட்தான் என்று சொன்னால் நம்பமுடியவில்லை. அந்த அளவுக்கு முழு உருவத்தையும் கலைத்துப் போட்டு உருமாற்றி இருக்கிறார்கள். கற்பனைக்கு எல்லையே கிடையாது என்பதை உறுதிபடுத்துவது போல, பைக்கின் ஒவ்வொரு பாகத்தையும் இழைத்து இழைத்து ஹார்லி டேவிட்சன் பைக்கே தோற்றுவிடும் விதத்தில் இருக்கிறது இந்த பைக்! இவர்களிடம் பேசியபோது, ''இந்த பைக்கை முழுக்க முழுக்க 'க்ரோ' (சிக்ஷீஷீஷ்) என்கிற ஆங்கிலத் திரைப்படத்தின் தீம் அடிப்படையில் வடிவமைத்தோம். இதன் சைடு பேனல்கள் சி.என்.சி (சிழிசி - சிஷீனீஜீutமீக்ஷீ ழிuனீமீக்ஷீவீநீணீறீ சிஷீஸீtக்ஷீஷீறீ) மெஷினால் செய்யப்பட்டவை.

இந்த பைக்கின் மிகப் பெரிய சிறப்பு என்னவென்றால், பெட்ரோல் டேங்க்தான். எங்களால் முடிந்தவரை 'க்ரோ'வின் அம்சங்களைக் கொண்டு வரும் வகையில், கற்பனையாக ஒரு டிசைனை உருவாக்கி-னோம். இந்த டேங்கின் வடிவம், பறக்கும் பறவையின் இறக்கைகளை நினைவுபடுத்தும். இந்த டிசைனுக்காகவே டேங்கின் கொள்ளளவை 5 லிட்டராகக் குறைத்தோம். டேங்கின் மூடியை பறவையின் வாய் போல வடிவமைக்க படாத பாடுபட்டோம்'' என்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick