காரை அலங்கரிக்க


நாம் வாங்க நினைக்கும் காரில் நல்ல மைலேஜ், சூப்பர் பர்பாமென்ஸ், அசரடிக்கும் ஸ்டைல் என அத்தனையையும் எதிர்பார்க்கிறோம். ஆனால், நமது பட்ஜெட்டுக்கு ஒரு மாருதி ஆல்ட்டோதான் வாங்க முடிகிறது. சிலர் ஆல்ட்டோ வாங்கினாலும் கொஞ்சம் காசு வந்ததும் அதை பென்ஸ் கார் ரேஞ்சுக்கு பீல் பண்ணி அழகையும் சொகுசையும் கூட்டிவிடுகிறார்கள். இப்படி அலங்கரிக்கப்பட்ட எத்தனையோ கார்களை நாம் பார்க்கிறோம். இது எப்படி சாத்தியமாகிறது?

கார் அலங்காரம் என்பது விதவிதமாக பெயின்ட் அடிப்பதோ, கலர் பல்புகள் மாட்டி பேஷன் ஷோ மாதிரி காட்டுவதோ, வித்தியாசமாக ஒலி எழுப்பும் ஹாரன்களை மாட்டி அலறவிடுவதோ அல்ல. இது ஒரு தனிக் கலை.

கார் டெக்கார்ஸ், கார் ஜூவல்லர்ஸ் என்கிற பெயரில் கார் அலங்காரம் செய்யும் கடைகள் வந்துவிட்டன. இவர்களில் எப்படிப்பட்டவர்களிடம் காரை ஒப்படைக்கலாம்? கார் அலங்காரம் செய்ய என்னவெல்லாம் தேவை? எவ்வளவு செலவாகும் என உங்களுக்கு எழும் சந்தேகங்களுக்கெல்லாம் இங்கே விடை காண முயற்சி செய்திருக்கிறோம். காரைச் சுத்தமாக வைத்திருப்பதுகூட ஒரு வகையில் அலங்காரம்தான். காரை எப்படித் துடைப்பது என்பதில் ஆரம்பித்து மியூஸிக் சிஸ்டம், செக்யூரிட்டி சிஸ்டம் என அத்தனை விஷயங்களையும் இங்கே தொகுத்திருக்கிறோம்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick