இது நரேன் ஸ்டைல்!


இது நரேன் ஸ்டைல்!

ர்வதேச ரேஸ் உலகில், தான் இன்னும் இருப்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என்பதற்காக, எப்போதாவது வெற்றிபெற்று ஒட்டுமொத்த மீடியாவின் கவனத்தையும் கவருவது நரேன் கார்த்திகேயனின் ஸ்டைல்!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற 'ஏ ஒன் ஜீபி' பந்தயங்களில் வெற்றிபெற்ற நரேன், நீண்ட இடைவெளிக்குப் பிறகு, கடந்த மே மாதம் 4-ம் தேதி, இங்கிலாந்தில் நடைபெற்ற ஏ ஒன் ஜீபி பந்தயத்தின் கடைசிப் போட்டியில் வெற்றிபெற்று இருக்கிறார். இந்த வெற்றியின் மூலம், தான் இன்னும் ஃபார்முலா-1 போட்டிகளுக்குத் தயாராகவே இருப்பதாகக் காட்டி இருக்கிறார், கோவையைச் சேர்ந்த இந்த 31 வயது தமிழ் மகன்!

இங்கிலாந்தின் பிரான்ட்ஸ்ஹாட்ச் மைதானத்தில் நடைபெற்ற போட்டிகளில் தகுதிச் சுற்றில் வெற்றிபெற்றதன் மூலம் முதலிடத்தில் இருந்து போட்டியைத் துவக்கினார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick