உல்லாசப் பயணம்!: சென்னை to ஒகேனக்கல்


அருவிகளின் ஆரவாரம்!

டந்த இரண்டு மாதங்களாகப் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஒகேனக்கல்தான் இந்த மாத உல்லாசப் பயணத்தின் இலக்கு. நம்மைப் பயணத்துக்கு அழைத்துச் செல்லத் தயாராக இருந்தது, புத்தம் புது டாடா சுமோ கிராண்டே.

கம்பீரமான தோற்றம், வசீகரிக்கும் வடிவம், சுமோவின் சாயல் இல்லாமல் புது வடிவம் எடுத்திருக்கும் கிராண்டேவை, நாம் பயணித்த பாதைகளிலெல்லாம் பலரும் விசாரித்தார்கள். காரின் உட்புறம் வசதியான இருக்கைகளுடன் விசாலமாகக் காட்சியளிக்கிறது. ஸ்டைலான கியர் லீவர், சத்தம் வராத ஏ.ஸி, காரைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவும் டிஸ்க் பிரேக், டிரைவருக்கு ஏற்றாற் போல அட்ஜஸ்ட் செய்துகொள்ளும் இருக்கை, ஸ்டீயரிங் வீல் என சொகுசு காருக்கான அத்தனை அம்சங்களும் இருக்கின்றன. காரை ஓட்டும்போது, டாடா சபாரியில் பயணிப்பது போன்ற உணர்வு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick