மலரும் நினைவுகள்!


மலரும் நினைவுகள்!

வின்டேஜ் கார்களுக்கென்று

டெல்லியில் பிரத்யேகமாக இயங்கும் 'புரோ போனோ பப்ளிக்கோ' (மக்களின் நன்மைக்காக) என்கிற அருங்காட்சியகம்தான், இந்தியாவிலேயே வின்டேஜ் கார்களுக்கான பெரிய மியூஸியம். டெல்லியின் பிரபல வக்கீலான தில்ஜீத் டைட்டஸின் பராமரிப்பில் இருக்கும் இந்த அருங்காட்சியகத்தில் கெடிலாக், செவர்லே, ஃபோர்டு, புய்க், டாட்ஜ் உட்பட 55 வின்டேஜ் கார்கள் உள்ளன. இவை அனைத்தும் 1910 முதல் 1960 வரை வெளிவந்த கார்கள். இந்த கார்கள் பற்றி நாம் வியந்து தில்ஜீத்திடம் பேசியபோது, ''இதென்ன பெரிய விஷயம். நான் உறுப்பினராக இருக்கும் 'ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் ஆஃப் இந்தியா'வில், என்னைப் போல வின்டேஜ் கார்கள் மீது காதல் கொண்ட 180 பேர் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். எல்லோரிடமும் இருக்கும் கார்களின் எண்ணிக்கையைக் கூட்டிப்பார்த்தால் மூவாயிரத்தைத் தாண்டும்'' என்றார்.

Click to enlarge

இந்த கிளப்பின் துணைத் தலைவரும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி பி.டி.ஜாட்டியின் (Jatti) மகனுமான எஸ்.பி.ஜாட்டியிடம் மட்டும் 200 வின்டேஜ் கார்கள் இருக்கின்றனவாம். 1964-ம் வருட மாடலான 'ஃபோர்டு மஸ்தாங்' கார் மீது ஜாட்டிக்கு தனி காதலே உண்டு. இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், பவர் ஸ்டீயரிங் எனப் பல வசதிகள் இருப்பது ஆச்சர்யமான விஷயம். ''இந்த ஃபோர்டு மஸ்தாங்

காரை வீதியில் ஓட்டிக் கொண்டு சென்றால், ராஜா காலத்து வாகனம் போல கம்பீரமாகக் காட்சியளிக்கும். இதை வேடிக்கை பார்க்க பெரிய கூட்டமே கூடிவிடும்'' என்று ஜாட்டியின் காரைப் பற்றி தில்ஜீத் அடுக்கிக் கொண்டே போனார்.

அதனால் எழுந்த ஆர்வத்தினால் ஜாட்டியைச் சந்தித்தோம். அவர் தனது கார்களைச் சுற்றிக்காட்டிவிட்டு, இது போன்ற வின்டேஜ் கார்களைப் பராமரிப்பதில் இருக்கும் கஷ்ட நஷ்டங்களைப் பற்றி பேச ஆரம்பித்தார்-

''ஒரு சமயம் இம்பீரியல் ஓட்டலுக்குச் சொந்தமான 1931 மாடல் புய்க் (BUICK) காரை கோணிப்பைகளில் கட்டி, என்னிடம் எடுத்து வந்தார்கள். அதை காராக மாற்றி வீதியில் ஓடுகிற கண்டிஷனுக்குக் கொண்டுவர நான் பட்ட பாடு இருக்கிறதே... அதை ஒரு சினிமாவே எடுக்கலாம். 'என்னங்க இப்படி கோணிப்பையில் கட்டிக் கொடுத்தா எப்படி?' என்று கேட்டபோதுதான், கடந்த 30 வருடங்களாக யாரும் அதைச் சீண்டியதேயில்லை என்ற விவரம் தெரியவந்தது. அதை காராக மாற்ற, அமெரிக்காவில் இருந்து உதிரி பாகங்கள் வரவழைத்துப் பொருத்தி, ஒரிஜினல் பெயின்ட் அடித்து, வின்டேஜ் கார் ராலிகளில் பங்குபெறச் செய்து, பரிசுகள் வாங்கும் அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறேன்'' என்றார் ஜாட்டி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick