ஜிப்ஸி பாபு!


ஜீப் ஒரு சொகுசு வாகனம் அல்ல. ஆனால், இதை வைத்திருப்பது ஒரு கெளரவம்!
ஜிப்ஸி பாபு!

கோயம்புத்தூர் பக்கம்

ரீ-மாடல் ஜீப்களை அதிகம் பார்க்க முடியும். 30 ஆயிரத்துக்கு ஜீப் வாங்கி, அதற்கு 3 லட்சம் ரூபாய் வரை செலவு செய்கிறவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் மாஸ்டராக இருப்பவர் 'ஜிப்ஸி' பாபு. இவர், ஜீப்களைச் சகட்டுமேனிக்கு மாற்றியமைத்து பட்டையைக் கிளப்புகிறார்.

''இந்தத் தொழிலுக்கு எப்படி வந்தீர்கள்?''

''சிறுவயது முதலே எனக்கு வாகனங்கள் மீது காதல். 15 வருடங்களுக்கு முன்பு பழைய ஜீப் ஒன்றை வாங்கினேன். ஓய்வு நேரத்தில் ஜீப்பில் எனக்குப் பிடித்தமான மாற்றங்களைச் செய்ய ஆரம்பித்தேன். மலேசியாவில் நண்பர்கள் இருந்ததால், அங்கிருந்து சில உதிரி பாகங்களை வரவழைத்துப் பொருத்தினேன். அதன் வித்தியாசமான தோற்றம் எல்லாரையும் கவர்ந்தது. அந்த ஜீப் மூலம் பிரபல-மான நான், நாளடைவில் நண்பர்களின் ஜீப்களுக்கும் ரீ-மாடல் செய்துதந்தேன். பின்னர் இதை ஒரு தொழிலாகச் செய்ய ஆரம்பித்தேன். இதுவரை சுமார் 70 ஜீப்கள் வரை ரீ-மாடல் செய்து கொடுத்-திருக்கிறேன். 20 தமிழ்த் திரைப்-படங்-களில் நான் ரீ-மாடல் செய்து கொடுத்த ஜீப்கள் நடித்திருக்-கின்றன.''

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick