அடங்கொய்யால... விடிஞ்சே போயிருச்சா!


அடங்கொய்யால... விடிஞ்சே போயிருச்சா!

ஊர்ல இருந்து நம்ம நண்பய்ங்க,

சொந்தக்காரய்ங்க எல்லாம் 'வா...வா'னு அடிக்கடி போன் போட்டு என்னயக் கூப்புட்டுக்கிட்டே இருந்தாய்ங்கண்ணே. சரி, நாமளும் போயி நாளாச்சு. ஒரு சேஞ்சுக்குப் போயிட்டு வருவோமேன்னு, கோயம்பேடு போக டவுன் பஸ்ஸ புடிச்சேன்.

பஸ்ஸ விட்டு கோயம்பேடுல எறங்-குனதுதேன் தாமசம், குடுகுடுனு ஒரு பய ஓடியாந்து 'மதுரை-யாண்ணே?'னு கேட்டான். இம்புட்டு ஆசையா கேக்குறானே... நம்ம ஊர்க்காரனா இருப்பா-னோன்னு, ''ஆமா... மதுரைதேன். நீ?'' பேசி முடிக்கிறதுக்குள்ள பாவிப்-பய, என் கையைப் புடிச்சு தரதரன்னு இழுத்துக்கிட்டுப் போனான்.

''யார்ரா நீ..? எங்கிட்டுறா இழுத்துக்-கிட்டுப் போற?''ன்னு ஒரு சவுண்டு வுட்டா, அவன் என்னய ஒரு டைப்பா பாத்தாண்ணே.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick