ஒவ்வொரு நாளும் துயரம்!


ஒரு நாள் போவார்... ஒரு நாள் வருவார்...
ஒவ்வொரு நாளும் துயரம்!

கார் முதல் ரயில்

இன்ஜின் வரை எந்த வாகனமாக இருந்தாலும் பெரிய டிரக்கில்தான் எடுத்துச் செல்லப்படுகின்றன. ஆனால், தொழிற்சாலையிலிருந்து எலும்புக்கூடாக வரும் லாரி அல்லது பஸ் சேஸியை வேறு எதிலும் ஏற்றிச் செல்ல முடியாது. சாலையில்தான் ஓட்டிக்கொண்டு செல்ல வேண்டும். சென்னை எண்ணூரில் உள்ள அசோக் லேலண்டில் தினமும் தயாராகும் 90 சேஸிகளை, நாடு முழுவதும் அனுப்பிவைக்க, ஒப்பந்த அடிப்படையில் சில நிறுவனங்கள் இருக்கின்றன. இந்த வேலையைச் செய்வதற்கென பிரத்யேகமான டிரைவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் எண்ணூரில் உள்ள அன்னை சிவகாமி நகரில் வசிக்கிறார்கள். இந்த டிரைவர்களைச் சந்தித்தோம்.

முதலில் வேலை, வருமானம் போன்ற விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார் டிரைவர் சார்லஸ் -

''வண்டி ஓட்டுற ஒவ்வொரு நாளுக்கும் 175 ரூபாய் சம்பளம் கிடைக்கும். இத்தனை கஷ்டமான வேலைக்கு இது ரொம்ப குறைச்சலான சம்பளம்தான். சில சமயம் மும்பை, பஞ்சாப்னு தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் வரை வண்டி ஓட்டிக்கொண்டு போவோம். ஊர் போய்ச் சேர்ந்ததும், சேஸியை அங்கு விட்டுவிட்டு, ரயில் பிடித்து சென்னை திரும்பி விடுவோம். இதுதான் எங்கள் வாழ்க்கை''.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick