வெற்றி மேடையில் இந்தியா!


விஜய் மல்லையா சிறப்புப் பேட்டி
வெற்றி மேடையில் இந்தியா!

பென்ஸ், பிஎம்டபிள்யூ, ரோல்ஸ்ராய்ஸ்...

என்று விதவிதமான சொகுசு கார்களில் வந்த பல பிரபலங்கள், மும்பையின் 'கேட் வே ஆப் இந்தியா'வில் இறங்கி, ஒரு காரை நோக்கி ஓடினார்கள். அமைச்சர்களில் ஆரம்பித்து கிரிக்கெட் வீரர்கள் வரை, ஷில்பா ஷெட்டியில் துவங்கி சமீரா ரெட்டி முடிய அன்று இரவு முழுவதும் அந்த காரை, 'ஒரே ஒரு முறை நேரில் பார்த்துவிட வேண்டும்!' என்ற துடிப்பில், அலை அலையாக மக்கள் வந்துகொண்டே இருந்தார்கள். அத்தனை பேரும் பார்க்க வந்தது, விஜய் மல்லையாவின் 'போர்ஸ் இந்தியா' அணியின் சார்பாக, பார்முலா-1 பந்தயங்களில் கலந்துகொள்ள இருக்கும் VJM01 என்ற ரேஸ் கார்! ஆம், அன்றுதான் அது முதன்முதலாக உலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

'கார் பந்தயத்தின் உச்சமான பார்முலா-1 பந்தயத்தில், ஒர் இந்திய அணி பங்குபெற்று, ஓட்டப்போகும் காரின் அறிமுக விழா மும்பையில் நடக்கும்!' என்று யாரும் கற்பனைகூட செய்திருக்க மாட்டார்கள். காரணம், பார்முலா-1 என்பது மற்ற விளையாட்டுகள் மாதிரியில்லை. இந்த கார் பந்தயத்தில் பங்குபெற, போர்ஸ் இந்தியா அணி செலவு செய்யப்போகும் தொகை எவ்வளவு தெரியுமா? 480 கோடி ரூபாய்!

வாழ்த்துச் சொல்லும் கைகுலுக்கல்கள், பூங்கொத்துக்கள், பறக்கும் முத்தங்கள், கட்டிப்பிடி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick