வணக்கம்


'நானோ'வின் அறிமுகம் நடுத்தர மக்களை மட்டுமல்ல, உயர்தர கார் தயாரிக்கும் வெளிநாட்டு நிறுவனங்களைக்கூட, சிறிய கார் கனவுகளில் ஆழ்த்தி இருக்கிறது. ரெனோ, நிஸான், டொயோட்டா, ஹ¨ண்டாய், வோக்ஸ்வாகன் என ஒவ்வொன்றும் சின்ன கார் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் ஒரு படி மேலே போய், 'நானோ' விலைக்கு நெருங்கி வந்து சின்ன காரைத் தயாரிக்க, மும்முரமாக முயற்சி செய்துகொண்டு இருக்கிறது பஜாஜ்! இதற்கிடையில் ரெனோவும் நிஸானும் இணைந்து சென்னை ஒரகடத்தில் நான்காயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொடங்கவிருக்கும் தொழிற்சாலையில் சிறிய கார்களும் தயாராக இருக்கின்றன என்பது, தமிழக மக்களுக்கு ஓர் இனிப்பான செய்தி.

இன்னொரு பக்கம், பெரிய கார்கள் எல்லாம் சின்ன கார்களாக உருமாறுவதும் நிகழ்ந்துவருகிறது. டாடா இண்டிகோ, தனது நீளத்தையும் விலையையும் குறைத்துக்கொண்டு விற்பனைக்கு வந்திருக்கிறது. அதேபோல, 2.4 லி சக்திகொண்ட ஹோண்டா சிஆர்&வி, 2.0 லி சக்திகொண்ட காராக, விலையிலும் சுமார் ஒன்றே கால் லட்சம் குறைந்திருக்கிறது.

நம் நாட்டைப் போலவே ஐரோப்பிய நாடுகளிலும் 'நானோ' பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 'எங்கள் பிரதேசத்துக்கு நானோ எப்போது வரும்?' என அவர்கள் ஆவலாகக் கேட்கும் கேள்விகள், செய்தியாக வந்துகொண்டு இருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick