ஜில்... த்ரில்... ட்ரில்!


ஜில்... த்ரில்... ட்ரில்!

'பைக் சாகசம் ஆண்களால் மட்டும்தான் முடியுமா? நாங்களும் செய்வோம்' என பெண்கள் குழு ஒன்று, சென்னை மகளிர் கிறித்துவக் கல்லூரி மைதானத்தில் விதவிதமாக 'பைக் ட்ரில்' செய்து அசத்தினர். இவர்கள் அனைவரும் அதே கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவிகள். 'ஸ்போர்ட்ஸ் டே' நிகழ்ச்சியில் ராணுவ வீரர்களைப் போல இவர்கள் செய்து காட்டிய பைக் சாகசம், எல்லோரையும் பிரமிக்கவைத்துவிட்டது.

இந்த 45 மாணவிகளும் பைக் பற்றிய நுணுக்கங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறார்கள். பல தடைகளைத் தாண்டி சாதித்துக்காட்டிய பூரிப்பில் இருந்த கல்லூரி ஸ்போர்ட்ஸ் செக்ரெட்டரி கீர்த்திகாவிடம் பேசினோம்.

''இதில் கலந்துக்க விரும்பியவர்களை செலக்ட் பண்றதில் இருந்து, அவங்க வீட்டில்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick