வருகிறது புதிய 800


வருகிறது புதிய 800
ஜூன் ரிலீஸ்!

'நானோவுடன் நாங்கள் போட்டி போடப் போவதில்லை' என்று மாருதி வெளியே சொல்லிக் கொண்டிருந்தாலும் நானோ ஜுரம் மாருதியை ஆட்டிப் படைக்கிறது. அதனால்தான் சத்தம் இல்லாமல் புதிய மாருதி 800-ஐ தயார்ப்படுத்தி வருகிறது. புதிய மாருதி 800-ஐ இன்னும் இரண்டு மாதங்களுக்குள் அறிமுகப்படுத்த இருக்கிறது என்பதுதான் இதன் ஹை-லைட்!

மாருதி 800 மாடல் கார் இதுவரை 25 லட்சம் விற்பனையாகியுள்ளன. கடந்த இரண்டு

வருடங்களாக விற்பனை இறங்குமுகத்தில் இருக்கிறது. அதனால், மாருதி 800-க்குப் பதிலாக அதிகமாக விற்பனையாகும் ஆல்ட்டோவில் அதிகக் கவனம் செலுத்தி வந்தது மாருதி. இந்த நிலையில் நானோவின் வருகை தங்களுக்குப் பெரும் ஆபத்தாக இருக்கும் என்று நினைக்கிறது மாருதி சுஸ¨கி நிறுவனம். எனவேதான் புதிய 800-க்கு அஸ்திவாரம் போட்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick