விலை குறைந்தது... விற்பனையும் குறைந்தது!


விலை குறைந்தது....
விற்பனையும் குறைந்தது!

''சிறிய கார் விற்பனையாளர்கள் காட்டில் மழைதான். இனி சிறிய கார்களின் விற்பனை கொடிகட்டிப் பறக்கும்'' என்பதுதான் மத்திய பட்ஜெட் வெளியானவுடன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் மத்தியில் உலவிய பேச்சு! 'பட்ஜெட்டில் சிறிய கார்களுக்கான கலால் வரி 16 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாகக் குறைக்கப்படுகிறது' என்ற செய்தி வெளியானவுடன் மாருதி, ஹ¨ண்டாய், டாடா உள்ளிட்ட அனைத்து சிறிய கார் தயாரிப்பாளர்களும் தடாலடியாக 7000 ரூபாயில் இருந்து கிட்டத்தட்ட 20,000 ரூபாய் வரை விலையைக் குறைத்தார்கள்.

இதனால் சிறிய கார்களின் விற்பனை கணிசமாக உயரும் என எதிர்பார்த்தால், 'சின்ன கார்களின் விற்பனை குறைந்துவிட்டது' என்கிறார்கள் டீலர்கள். ஆனால், மாருதி எஸ்எக்ஸ் 4, இண்டிகோ, ஸ்விஃப்ட் டிசையர் உள்ளிட்ட வரிச்சலுகை பெறாத நடுத்தர அளவு கார்களின் விற்பனை அதிகரித்துள்ளதுதான் அனைவருக்கும் ஆச்சர்யம்.

மாருதிக்கே சரிவு!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick