வெல்லத் துடிக்குது.... புதிய லான்ஸர்!


வெல்லத் துடிக்குது... புதிய லான்ஸர்!

சொகுசு கார்கள் வரிசையில் மிட்சுபிஷி லான்ஸருக்கு எப்போதுமே ஒரு தனி இடம் உண்டு. விற்பனையில் சரசரவென முன்னேறிய லான்ஸரை, சிறிதுகாலம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது மிட்சுபிஷி. ஆனால், தற்போது வேகவேகமாக வளர்ந்துவரும் இந்திய கார் மார்க்கெட்டால், தனது கவனத்தை லான்ஸர் பக்கம் திருப்பியுள்ளது.

மிட்சுபிஷி நிறுவனம், அடுத்த ஆண்டு துவக்கத்தில் புதிய மாடல் லான்ஸரை வெளியிடுகிறது.

படு கவர்ச்சியாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் இதன் முன் பக்கம், காண்பவரைக் கவர்கிறது. ஹோண்டா சிவிக், டொயோட்டா கரோலா ஆகிய கார்களின் நீளம், அகலம், உயர அளவுகளைவிட சற்று குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கலாம். காரின் புறத் தோற்றத்தைவிட பர்ஃபாமென்ஸில் அதிகக் கவனம் செலுத்துகிறதாம் மிட்சுபிஷி. இதன் உள்பக்கம் ஸ்போர்ட்ஸ் கார் போன்று ஸ்டைலாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இரு பெரிய டயல்கள், 3 ஸ்போக் ஸ்டீய-ரிங் வீல், கறுப்பும் பழுப்பும் கலந்த டேஷ் போர்டு என கலக்கலான தோற்றத்தில் வசீகரிக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick