உல்லாசப் பயணம்!: சென்னை to மூணாறு


இந்த முறை நமது உல்லாசப் பயணத்தின் கதாநாயகன், நால்வர் சொகுசாக அமர்ந்து செல்ல வசதியான பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார்!

பிரமாண்டம், கம்பீரம், சொகுசு என எப்படி வர்ணித்தாலும் அது பிஎம்டபிள்யூதான். பிரமிப்பூட்டும் இதன் வெளிப்புறத் தோற்றம் அனைவரையும் திரும்பிப் பார்க்கவைக்கிறது. உள்ளே நுழைந்தால்... ஐந்து நட்சத்திர ஓட்டலின் வரவேற்பறைதான். இஷ்டத்துக்கு ஸ்டீயரிங்கையும் இருக்கைகளையும் வளைத்துக்கொள்ளும் வசதி, ஏ.ஸி, வைப்பர் போன்றவை ஆட்டோமேட்டிக்காக இயங்கும் விந்தை!

அதிகபட்ச வேகத்தைத் தேர்ந்தெடுக்க குரூஸ் கன்ட்ரோல். முழுக்க முழுக்க

எலெக்ட்ரானிக்ஸ் கட்டுப்பாட்டில் இருப்பதால், எல்சிடி திரையில் அனைத்து விவரங்களையும் அறியும் வசதி இருப்பதுடன், தொலைக் காட்சியும் காணலாம். செட்டாப் பாக்ஸ் இணைத்துவிட்டால், எல்லா சேனல்களும் காண முடியுமாம். ஆனால், காரை நிறுத்திய பிறகுதான் பார்க்க முடியும். காரணம், கவனம் சிதறிவிடுமென பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள். சீட் பெல்ட் அணியவில்லை என்றால் எச்சரிக்கை அலாரம் அடித்துக்கொண்டே இருக்கிறது. இருக்கைகளைச் சுற்றி ஆங்காங்கே காற்றுப் பைகள் இருக்கின்றன. ரிவர்ஸ் எடுக்கச் சிரமப்பட வேண்டியதில்லை. முன்னும் பின்னும் சென்ஸார்கள் இருப்பதால், டேஷ் போர்டில் உள்ள மானிட்டரில் தெளிவாகப் பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick