மாதம் ஒரு வழக்கு


ஓவர் லோடு யார் பொறுப்பு?

பேருந்துப் பயணம் என்பது யாராலும் தவிர்க்க முடியாத ஒன்று. ஏதாவது ஒரு சமயத்தில் பேருந்தில் பயணம் செய்தே ஆக வேண்டும். ஓட்டுநர் இருக்கைக்கு மேலே பர்மிட் 51+2 அல்லது 47+2 என எழுதப்பட்டு இருக்கும். இது, அந்தப் பேருந்தின் இருக்கைகளின் எண்ணிக்கையை மட்டும் குறிப்பவை அல்ல.

ஓட்டுநர் - நடத்துநருடன் சேர்த்து எத்தனை பயணிகள் அந்தப் பேருந்தில் பயணம் செய்யலாம் என்ற அனுமதியும்தான்! அதிகப் பயணிகளை ஏற்றினால், அந்தப் பேருந்தின் உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரம் போக்குவரத்துத் துறை அதிகாரிகளுக்கு உண்டு. ஆனால், நடைமுறையில் இதைக் கண்டுகொள்வதே இல்லை. பேருந்தின்

இருக்கையில் அமர்ந்திருப்பவர்களைவிட நின்றுகொண்டும் சமயத்தில் அதன் கூரைமீது அமர்ந்து கொண்டும் பயணிப்பவர்கள்தான் அதிகம். இப்படி புளிமூட்டையை அடைத்தது போல பயணிகளை ஏற்றிச் செல்லும்போது விபத்து ஏற்பட்டால், அதில் பயணம் செய்யும் பயணிகளுக்கு காப்பீடு, இழப்பீடு உத்தரவாதம் எதுவும் கிடைப்பதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick